
1947 வரை ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டுக் கிடந்த இந்தியா இன்று நிலாவிற்கு செயற்கைக் கோள்களைச் செலுத்தி ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளது. உலகிலேயே ஏழாவது பெரிய நாடு. இரண்டாவது அதிகமான மக்கள் தொகையைக் கொண்டது இந்தியா. இந்தியாவில் 50 சதவீதம் இளைஞர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் தான், இந்தியாவை வல்லரசாக்கும் முனைப்போடு செயல்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கனவை நிறைவேற்றப் போகின்றனர். உலகிலேயே நான்காவது மிகப்பெரிய இராணுவம் கொண்டது இந்தியா. இந்தியாவிலிருந்துதான் பல நாடுகளுக்கு பல பொருட்கள் ஏற்றுமதியும் இந்தியாவிற்கு பல பொருட்கள் இறக்குமதியும் ஆகின்றன. உலகின் வர்த்தக மையமாக இந்தியா மாறிக்கொண்டு இருக்கிறது. உள்நாட்டுப் பிரச்சனை வெளிநாட்டினரால், நெறுக்கடிக்கு தள்ளப்பட்டாலும் நெருப்பிலிருந்து எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் முன்னேறிக்கொண்டே இருக்கிறது இந்தியா. பல வளங்களைக் கொண்டிருந்த போதும் இந்தியாவில் பலர் வறுமையில் தவிக்கின்றனர். இளைஞர்கள் ஆகிய நாம் ஆடம்பரங்களுக்கு ஆசைப்படாமல் அத்தியாவசியங்களை மட்டும் வாங்கி மீதம் உள்ள பணத்தைக் கொண்டு வறுமையில் தவிப்போர்க்கு உதவ வேண்டும். இந்தியா சில ஆண்டுகளில் வல்லரசாகும் என்பது உறுதி. ஆனால் அதற்கு நம் நாட்டின் இயற்கை வளங்களையும் நம் நாட்டு மக்களின் வாழ்வையும் விலை கொடுப்பது தவறு என்று இளைஞர்களாகிய நாம் உணர வேண்டும்.
கிருஷ்ணா
12- ஆ
