
மரங்கள், கடவுள் தந்த வரம்.மரம் விழுகிறது; காடுகள் அழிகிறது. மரங்கள் அழிய நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே காரணம் மனிதன்தான். கடவுளால் உண்டாக்கப்பட்ட மரத்தை மனிதர்கள் அழிப்பதற்கு உரிமை கிடையாது. மரங்கள் நமது நண்பர்கள். நண்பர்களை அழிக்கலாமா? இப்படிப்பட்ட கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். மரத்தை வெட்டுவது ஒரு கொலையைச் செய்வதற்குச் சமம். அதனால் மரத்தை வெட்டியவனைச் சிறைச்சாலையில் போட வேண்டும். மரத்தை வளர்ப்போம்; மழையைப் பெறுவோம். மரத்தை வெட்டாமல் வளர்ப்பவனுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
ர.சந்திரபிரசாத்
9- ஆ
