
கவலைகள் தெரியாத
வண்ணத்துப்பூச்சிகள்
சிறகடித்து வாழும்
வானத்தின் பறவைகள்.
ஒரு வார்த்தையில்
பல அர்த்தங்கள்
சிந்திக்க வைக்கும்
சிந்தனையாளிகள்.
மெல்லிய குரலில்
மழலை மணம்
துள்ளிய பேச்சில்
பேசுவாய் தினம்.
சுட்டித்தனத்தின்
சொந்தக்காரர்கள்.
ஒரு வார்த்தையில் எங்களை
சிந்திக்க வைத்தாய்
வாழ்க்கையை வாழ
அர்த்தம் தந்தாய்.
சிந்திக்க வைக்கும்
சிந்தனைப் பேச்சு
உன்னோடு விளையாடி
ரொம்ப நாளாச்சு.
பட்டுக் குட்டி செல்லமே!
பா.கிரிநந்தினி
12- ஆ
