மனிதத்துவம்

அனைவருக்கும் என்னுடைய  வணக்கங்கள்……….மனிதன் என்ற ஒருவன் பிறக்கும்போது அவனுள் ஓர் மனிதத்துவம் சேர்ந்திருக்கும். அந்த மனிதத்துவத்தில் இருப்பது என்னவென்று தெரியுமா   அன்பு , கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு.  இவையெல்லாம் அதன் உட்பாகங்கள்தான்.  இதற்கெல்லாம் மிகவும் முக்கியப் பண்பு உயிரிரக்கப் பண்பு, இவையெல்லாம் கலந்து உள்ளிருப்பது  மனிதநேயம்.  இதை யாரிடம் உள்ளது என எளிதாகக் கண்டறிய என்ன செய்வது?  பிறருக்குத் துன்பம் அளிக்காமல் இயலாதவர்களின் துன்பத்தை போக்குதல் ஆகும்.   இதற்கு சான்றாக 1893 ல் அமெரிக்காவில் நடைப்பெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில், அனைவரையும் ‘சகோதர சகோதரிகளே!! என விவேகானந்தர் விளித்தபொழுது அவருடைய  மனிதநேயம் தெரிகிறது.  இதிகாசங்களில் அதுவும் இராமாயணத்தில் இராவணன் நிராயுதபாணியாக நின்ற பொழுது ‘இராமன் இன்று போய் நாளை’  வா என்றார்.  இவர்களைவிட ஒர் மனிதனாக பிறந்து  நம்முடன் வாழ்ந்து மனித  மனிதநேயத்துக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.  அவர்தான் அன்னை தெரசா ‘அன்பின் பணியாளர்’  என்ற சபையை நிறுவினார்.   அது  இன்றும் ஏழைகளுக்கு உதவுகிறது.

ஒரு குடும்பத்தின் ஆக்கம் தாய்மை

ஒரு மாணவனின் முன்னேற்றம் ஆசிரியர்

ஒரு நாட்டின் பெருமை மனித நேயம்…….

.சுபலட்சுமி

11 – அ