பிறருக்குக் கைக்கொடுப்போம்

ஒர் மனிதன், தன் மொழியையும். நாட்டையும் நாகரிகத்தையும் அடையாளப்படுத்துவதை விட மனிதநேயத்துடன் இருப்பதே  இன்றியமையாத செயலாகும்.  எடுத்துக்காட்டாக, நான் மொழியில்  தமிழன்,   நாட்டில் இந்தியன்  ,  உலகில் உலகன் .  இதனைக் காட்டிலும் ஒரு மனிதன் மனிதராய் இருப்பதே சிறந்த மனித இயல்பாகும்  என்கிறார்  காந்தியடிகள்.

மனித நேயம் இல்லையென்றால்  உன் வாழ்வு தேயும்,

வளர்ந்தால் உன் வாழ்வு சீரிப்பாயும்.

என்னும் இவ்வடிகளிலுள்ள ஒவ்வொரு சொல்லும் நம் மனதைக் கொல்லும்,  அளவிற்கு உள்ளது.

அன்னை தெரசா ஓர் சராசரி ஆசிரியர், ஆனால் அவர்களின் மனிதநேயத் தன்மையால்தான்  உலகம் முழுவதும் அவரது பெருமை நிலைத்திருக்கிறது.  நாம் அனைவரும் அன்னை தெரசா போல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை,  ஓர் மனிதனாய் இரக்கத்துடன் இருந்தால் போதும்,   இவ்வுலகமே மிகப் பெரிய மாற்றத்தை அடையும்.   உன் மனதில் இருப்பது தூய்மையற்ற சாயம் அதை அழிப்பதே மனித நேயம் என்னும் இவ்வரிகள் ஆழ்ந்த பொருளுடையது.

மனிதனாகப்  பிறந்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து,  மனிதனாக வாழ்வதே  சிறப்பு. இதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் காந்தியடிகள்.  அனைவரும் காந்தியடிகளாக ஆகிவிட முடியாது,    ஆனால், அவர் பண்பைப் பெற்று வாழ்வில் வெற்றி அடைய முடியும்.

என்னைப் பொருத்தவரையில் சுய நலமாக இல்லாமல் மனிதனாக இருந்தால் மட்டும் போதும் கண்டிப்பாக  மனித நேயம் மலரும்.

பிறருக்குக் கைக்கொடுப்போம்

வாருங்கள்…………….

 அ.சிவராம்

11-