என் கனவு

உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன.  ஒவ்வொருவரும் ஏதாகிலும்  ஒரு தொழிலைத் தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பர் அத்தகைய கனவுகளில், அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர்.  அத்தகைய கனவு நனவாகும் போது, வாழ்வே அவர்களுக்கு வெளிச்சமாகிறது.  அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு.

நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவேன்.   பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுடன் பழகி, அவர்களின் பிரச்சனையைக் கண்டறிவேன்,  அவர்களை அன்பாக விசாரித்து, நோய்க்கேற்ற மருந்து கொடுப்பேன்.  அவர்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிப்பேன்.  கைராசிக்கார மருத்துவர் என அனைவரும் போற்றும் வண்ணம் நடந்து கொள்வேன்.

அடுத்து, நான் சொந்தமாக ஒரு மருத்துவ மையம் திறப்பேன்.  அது ஒரு நிபுணத்துவமையமாக நிபுணர்கள் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வேன்.  ஏழைகளுக்கு அங்குச் சிறப்புக் கழிவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வேன்.

நான் ஒரு மருத்துவரானால் என் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வேன்.  என்னுடைய கனவு நிறைவேற கடுமையாகப் படிப்பேன்.  என் கனவுக்கானப் பாதை கல்வியே என நான் உணர்வேன்.   எனவே, கல்வியில்  என் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.

 கி.நித்யஸ்ரீ

9-அ