அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள் – அனைவரிடமும்

அன்பு காட்டுங்கள்

அறிவு, அழகு, வயது, தகுதி கடந்து

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.

அச்சம் நீக்கும்; சினம் தவிர்க்கும்;

நட்பு பலப்படும்; உறவு மேம்படும்;

அகந்தை அகலும்; அகம் சிறக்கும்;

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

மதம், மொழி, இனம், நாடுகடந்து

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

போரைத் தவிர்க்கும் பொறாமை நீங்கும்;

கர்வம் விலகும்; பொறுமை வளரும்;

சிந்தை பெருகும்; சித்தம் தெளியும்;

வறுமை போகும் வாழ்வு வளமாகும்;

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

ந. பத்மப்பிரியா

தமிழாசிரியை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *