இரு கைகள் போதாது
உன்னை வணங்கிட
ஒரு ஜென்மம் போதாது
உனக்குச் சேவை செய்திட
இரு கண்கள் போதாது
உன்னை இரசித்திட
ஓர் உலகம் போதாது
உனக்கு வழங்கிட
இரு செவிகள் போதாது
உன்குரல் இரசித்திட
ஓர் இதயம் போதாது
உனக்காகத் துடித்திட.
ஜானகி ராமன்
பத்தாம் வகுப்பு-அ பிரிவு
அப்பா என்றால் வழி காட்டி, அக்கா என்றால் நம்பிக்கை, ஆனால் அம்மா என்பவளோ நம் இதயம். அவள் தன் தொப்புள்கொடியை அறுப்பது நம்மைப் பிரிப்பதற்கு அல்ல நம்மைப் புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லவேயாகும். அவள் அன்று செய்ததே தொடக்க விழா. அன்பு, அரவணைப்பு, அக்கறை, பொறுமை எல்லாமே தருபவள்தான் அம்மா.வாழ்வில் நம்மை உயர்த்திட பள்ளி,கல்லூரியில் சேர்த்திட கல் உடைத்து, பல இடங்களுக்குச் சென்று வேலை செய்து அதுவும் போதாதென பல்லாயிரங்களில் கடன் வாங்கிப் பல அவமானங்களை நமக்காகச் சந்திக்கிறாள்.
நாம் அம்மா என்றழைக்க நம்மை ஈன்ற போது கதறிய இதயம் அம்மா. இவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் நமக்காகச் செய்திடும் அவளின் அன்பை அருமையை உணராமல் முதியோர் இல்லத்தில் சென்று சேர்க்கிறோம் என்றுதான் அவளை உணர்வோமோ? தெரியவில்லை.
ஜெ.அரவிந்
பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு