அறிவியல் வளர்ச்சியும் இன்றைய இந்தியாவும்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் மிகுதியாக வளர்ந்துள்ளன. அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சி மனித நாகரிகத்தையும் இதுவரை நம்பிக்  கொண்டிருந்த பல நம்பிக்கைகளையும் தகர்த்துப் புரட்டிப் போட்டுள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அதனை உலகத்தின் இன்றியமையாத நாடுகளில் ஒன்றாகக் கருத வைத்துள்ளது. உணவுத்துறை, போக்குவரத்துச்சாதனம், மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு , வணிகம், விண்வெளி போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியா அறிவியலால் அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. உணவுத் துறையைப்  பொருத்த வரையில் நவீன விவசாய  முறைகள் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுள்ளன. அதன் மூலம் நாம் உணவுப் பொருட்களை நமக்குத் தேவையான அளவு உற்பத்தி செய்து கொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் இந்தியா உணவுக்காக அயல் நாட்டின் உதவியை நம்பி இருந்த நிலைமை மாறி உணவுப் பொருட்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்  அளவிற்கு வளர்ந்துள்ளது. போக்குவரத்துத் துறையைப் பொருத்த வரையில் தரைவழி, வான்வழி, நீர்வழி ஆகிய மூன்று வழிகளிலும் இந்தியா குறிப்பிடத் தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. தரமான சாலைகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் இணைத்துள்ளன. வான்வழிப் போக்குவரத்தும் விமானங்களின் சேவையும் அதிகரித்துள்ளன. கப்பல் போக்குவரத்தும் வளர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் கணிசமாக உயர்ந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா உலகின் முதன்மையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. விண்வெளிக்குச் செயற்கைக் கோள்கள் இந்தியாவின் தொலைத் தொடர்பில் பயனுள்ள சேவையைச் செய்து வருகிறது. இதனால் இந்திய மக்களின்  வாழ்க்கைத்தரம் மிகவும் உயர்ந்துள்ளது.

                                                             பி. சுஷ்மிதா

                                                     எட்டாம்வகுப்பு – ஈ பிரிவு

 

       ஆழ்கடல் ஆராய்ச்சியும், அகன்ற விண்வெளி ஆராய்ச்சியும் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டே இருக்கிறதுஆனாலும் அறிவியலின் அதிசயம் இவ்வளவு தான் என்று நம்மால் அளவிட முடியவில்லை.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,  வானவியல் சாத்திரத்தை வகுத்து அமைக்கப்படும்.  ஆராய்ச்சிக் கூடங்கள் தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மிகவும் அவசியம் என நம் நாட்டின் முதல் பிரதமர் கூறினார்.  அதனை மெய்ப்பிப்பது போன்று  இன்றும் விண்வெளியில் நாம் படைத்திடும் சாதனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருகிறது.

                                                      செ. லீனாதாரணி

                                          ஒன்பதாம் வகுப்பு  ஆ  பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *