அழகு
தந்தையின் கைப் பிடித் துலா
சிரிப்பு – அழகு
தன்னுலகமே பெயரெனென
நினைக்கும் தாத்தாவின்
திண்ணம் – அழகு
சொந்தங்கள் புறந் தள்ளினாலும்
அரவணைக்கும் அன்னையின்
அகம் – அழகு
ஆசானை உயர்த்தும்
மாணவனின்
மதி – அழகு
வெற்றியைத் தேடி
ஓடும் வீரனின்
வேகம் – அழகு
தோற்றாலும் துவளாதே யெனத்
தோள் கொடுக்கும் தோழனின்
நட்பு – அழகு
பிரச்சனையின் தீர்விற்கு
முடிவெடுக்கும்
மெளனம் – அழகு
கண்மூடி முகிலில்
உலாச் செல்லும்
கற்பனை – அழகு
வானமே குடையாய்
புல்வெளியே விரிப்பா யிருக்கும்
குவலயம் – அழகு
நித்தம் நம்மோடு
நடை பயிலும்
நிகழ்வுகள் – அழகு
அழகத்தனையும் இரசித்திடு
மனமது மகிழ்வடையும்
உன் கண்ணோடு!
த. செல்வராணி
தமிழாசிரியை
என்.எஸ்.என். நினைவுப்பள்ளி