நம் அனைவருக்கும் உயிர்காக்கும் ஊர்தி அவசரத்திற்கு மிகவும் உதவும்.ஒரு வேளை நமக்கு உதவவில்லை எனினும் ஆபத்திலிருப்போருக்கு நாம் அதனைவரவழைத்து அனுப்புவதனால் அவர் பயன் பெறுவர்.அவ்வுதவி நமக்குச்சாதரணமாக இருந்தாலும் காயமடைந்தவருக்கு அது ஆறுதலளிக்கும்.ஓர் அழைப்புவிடுத்தால் போதும்; ஓர் உயிரைக்காக்கும் பாக்கியம் பெறலாம்.இதனை நமக்கு அறிமுகம் செய்த அரசாங்கத்திற்கு எனது நன்றிகள் பல. 108 என்ற எண்ணிற்கு எவ்வளவு சக்தி தெரியுமா?உயிர் காக்கும் ஊர்தியை மதிக்கும் வகையில் உடனடியாக வழி விடவேண்டும்.அது நம்மைத்தாண்டினால் யாருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று எண்ணி எல்லோரும் அவர்களுக்காக வேண்டிக்கொள்வர்.அதில் பயணம் செய்யும் அந்நபருக்கு அது பேருதவியாக இருக்கும்.அதனால், 108 ன் ஒலிப்பானின் ஒலிகேட்டால் உடனடியாக வழிவிட்டு நம்மாலான சேவையைச் செய்வோம்.
மோ.சாம்பவி
ஒன்பதாம்வகுப்பு ‘அ’ பிரிவு