உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால்…

உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால்…

bird2எனக்கு உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால் நான் பறவையாக மாறி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் மிகவும் இன்பமாக அங்கும் இங்கும் பறப்பேன். வானத்தை எட்டிப் பிடிக்க மேகத்தைத் தொடுவேன். உயரத்திலிருந்து அனைத்தையும் பார்ப்பேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

த. ஸ்ருதி VI D

 

bird3உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால் நான் பறவையாக உருமாறுவேன். பறவைகள் தான் நினைக்கும் இடத்திற்குச் சுதந்திரமாகப் பறந்து செல்கின்றன. அவைகளுக்கு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பேருந்து வசதியோ, விமான வசதியோ அதற்கான கட்டணமோ செலுத்த வேண்டியதில்லை. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குச் சுதந்திரமாகச் சென்று வரலாம். அதற்காக விசா பாஸ்போட் என எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாடு மற்றும் பிற நாட்டில் உள்ள இயற்கை வளங்களைக் கண்டு களிக்கலாம். காடுகளில் சுதந்திரமாகப் பறந்து அங்கிருக்கும் இயற்கைக் காட்சிகளையும் கண்டு களிக்கலாம். எனவே பறவையாக உருமாற ஆசைப்படுகிறேன். அதனால் தான் விண்ணில் தவழும் மேகங்களுக்கிடையே பரவசமாய் பாடிப் பறந்து செல்வேன்.

பி.சுஸ்மிதா VI – C

bird5எனக்கு உருமாறும் வாய்ப்பு கிடைத்தால் நான் ஒரு கழுகாக மாறுவேன். ஏனென்றால் நான் கழுகாக மாறி உயரமான மலைப் பிரதேசத்தில் வாழுவேன். அங்கிருந்து பார்த்தால் இயற்கையின் அழகை என்னால் இரசிக்க இயலும். மேலும் மற்ற பறவைகள் எனனைப் பார்த்து அஞ்சும். பிற பறவைகள் எவ்வாறு உரையாடும் என்பதனையும் அறிவேன்.

மா.அனுபல்லவி VI – C

எனக்கு உருமாறும் வாய்ப்பு கிடைத்தால் நான் பறவையாக மாறுவேன் ஏனென்றால், பறவைகள் பறப்பது, போல நானும் பறக்க வேbird6ண்டும் என்பது என் ஆசை, இது எனக்கு மகிழ்ச்சியைத் தரும். ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாகச் செல்லலாம். சாலையில் போக்குவரத்து நெரிசல் சில நேரத்தில் இருக்கும், நான் அதை தவிர்ப்பதற்காகப் பறந்து போவேன். பறந்து, சென்று உலகத்தைப் பார்ப்பது மிகப்பெரிய ஆசை அதனால் தான் நான் பறவையாக மாற ஆசைப்படுகிறேன்.

சி.ஈஷ்வர் VI – D

எனக்கு உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால் நான் முயல் குட்டியாக ஆசைப்படுவேன். ஏனென்றால் முயல் எனக்கு பிடித்த அழகான விலங்கு.முயல் வெள்ளை நிறத்தில் இருக்கும். எனக்கும் வெrab1ள்ளை நிறம் பிடிக்கும். மேலும் சிறுவர்கள் என்னைப் பார்த்துக் தூக்கிக் கொஞ்சி மகிழ்வதைக் கேட்க ஆசையாக இருக்கும். எல்லோரும் என்னை விரும்புவர்.

தி. ஹர்ஷிதா VI – C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *