உன் எண்ணம் உன் முகத்தில் தெரியும்
உன் தகுதியைக்காட்டும்;
உன் எண்ணம் உன்னைப்பழிக்கும் – சில நேரம்
உன் எண்ணம் உன்னை ஆசிர்வதிக்கும்;
உன் எண்ணத்தால் நீசாதிப்பாய்; – எதுவாயினும்
உன் எண்ணமே உன்னைப் பிரதிபலிக்கும்
மோனாஸ்ரீ
ஒன்பதாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு
என் வாழ்க்கையை உணர்த்தும் எண்ணங்களே!
உனக்கு நன்றியுரைக்க வார்த்தைகளில்லை;
எண்ணம் என்னும் உயிர் நண்பனே!
என்றும் நினைக்கும்படி நீ இருக்கிறாயே
உள்ளம் முழுவதும் உன் ஓட்டமே!
நீ இல்லாமல் போனால் நான் இல்லையே!
இன்னொரு உயிர் எனக் கூறுவேன்
நீ இருக்கும் வரை வாழ்க்கை நலமே!
க. மோகன்ராஜ்
ஒன்பதாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு
வண்ணங்கள் போன்று எண்ணங்கள்
குழந்தைப் பருவத்தில் மழலையாய்
இளமைப் பருவத்தில் வண்ணங்களாய்
இரண்டாம் பருவத்தில் திசையிழந்து
வழிகளில் திணறி திசை மாறித்தத்தளித்து
அதன்பின் நேர்வழியைத்
தேர்ந்தெடுத்து உயரத்தை எட்டிட என்றும்
நேர்மறை எண்ணங்கள் என்னை வாழவைக்கும்.
தி.திரிஷிகாவர்ஷா
ஒன்பதாம்வகுப்பு ‘அ’ பிரிவு
தண்ணீரினுள் பற்றவைக்கும் நெருப்பல்ல;
வானத்தில் பற்றி எரியும் சூரியனைப் போல
கிணற்றினுள் தேங்கிக்கிடக்கும் நீரல்ல
முடிவே இல்லாச்சமுத்திரம் போல
நிலத்தினுள் பதுங்கிக்கிடக்கும் நிலக்கரியல்ல
பொங்கி வெடிக்கத்துடிக்கும் எரிமலை போல
எண்ணங்கள் என்றும் அழியாதவை!
அடிகள் சறுக்காதிருக்க
முயற்சிகள் தோற்காதிருக்க
எதிர்பார்ப்புகள் நிறைவேற்றிட
நேர்மறை எண்ணமது வேண்டும்.
கோ.மிருதுளா
பத்தாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு