எதிர்பார்ப்பு…
என் மாணவக் கண்மணியே!
கைக்குள் அடங்காக்
காற்றாய்
சிறகு விரித்த
பட்டாம்பூச்சிகளாய்
கொஞ்சித் திரியும்
கிளிகளாய்
நடமாடும்
கவிதைகளாய்
உலா வரும் நீ
என்று தொடுவாய்?
வானத்தைக்
காத்திருக்கிறேன்
எதிர்பார்ப்புடன்…
ஹெலன்
விலங்கியல் ஆசிரியை
என்.எஸ்.என். நினைவுப் பள்ளி