இந்தியர்களின் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலவாகத் திகழ்ந்த பாரதியாரே எனக்கு பிடித்த தலைவர்.நாட்டில் என்ன நடக்கிறது என்று எல்லா இந்தியரும் தெரியாது இருந்தபோது உண்மையை எடுத்துரைத்தவர் இவர்.
“ஆயிரம் உண்டு இங்கு சாதி, எனில்
அயலவர் வந்து புகல் என்ன நீதி”
என்று பாடி எல்லோருக்கும் விழிப்புணர்வு தந்தார். சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைக்க வழி காட்டியவரும் இவர்தான்.
ஓடும் உதிரத்திலும், வழிந்தொழுகும் கண்ணீரிலும்
தேடிப் பார்த்து விட்டேன் சாதி தெரியவில்லை
என்று கூறினார். அன்று. அவரது புலமையைப் பாராட்டி எட்டையபுரம் மன்னர் இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். மிகுந்த தேசப் பற்றுடனும் மனதைரியத்துடனும் காணப்பட்ட இவர், எல்லா இந்தியர்களுக்கும் அவற்றை ஊட்டும் பணியில் ஈடுபட்டார். மரணத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாத அவர்,, காலனைப் பார்த்து
“காலா! உன்னை நான் சிறு புல் என மதிக்கிறேன்.
என் கால் அருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்”
என்றார். தன் இறுதி மூச்சுவரை, விடுதலைக்குப் பாடுபட்ட இவர், 1921 – ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரின் இது போன்ற இந்த வீரமான உரைகளாலேயே நான் கவரப்பட்டேன்.
இர. அப்சரா
ஏழாம் வகுப்பு-இ பிரிவு