எனக்கு மறையும் ஆற்றல் கிடைத்தால்
எனக்கு மறையும் ஆற்றல் கிடைத்தால் அந்த ஆற்றலை வைத்து நல்ல காரியங்களைச் செய்வேன். மறைந்து சென்று செய்யும் காரியங்கள் எல்லாம் நல்ல விஷயங்களாக இருக்காது என்று நம்பினேன். ஆனால் அந்த வரம் நல்ல விஷயங்களைச் செய்வதற்காகவே கடவுள் எனக்கு அளித்தது. நான் மறைந்து சென்று மக்கள் செய்யும் தவறுகளைச் சீர் செய்வேன். மக்கள் போடும் குப்பைகளை எல்லாம் ஆங்காங்கே போடாமல் தடுத்தால் நாடும் தம் சுற்றுப்புறமும் சுத்தமாகும் என நினைத்து அதைச் செயல்படுத்துவேன்.
நல்ல விஷயங்களைச் சமுதாயத்துக்காகச் செய்வேன்.
ஆனிபிரிசில்லா. S VIII – D
எனக்கு மறையும் ஆற்றல் கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன். ஆனால் அதே சமயம் யார் கண்ணும் தெரியாமலேயே போய் விடுவேன் என்ற கவலையும் எனக்குள் இருக்கிறது. அப்படி நான் மறையும் ஆற்றல் என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கும், என் நண்பர்களுக்கும் செய்து உதவுவேன். அவர்களுக்கு உதவி செய்து நான் செய்த பாவத்தையெல்லாம் போக்குவேன். கண்பார்வை இல்லாமல், காது கேட்காமல், பேசமுடியாமல் இருக்கும் மக்களுக்கு இலவச சிகிச்சை தருமாறு கேட்பேன். அதன் படி செய்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வேன்.
கெள.சு. சுபஸ்ரீ, VIII – D
எனக்கு மறையும் ஆற்றல் கிடைத்தால் நான் கடவுள் போல் செயல்படுவேன். எங்கு யாருக்கு கெடுதல் நடந்தாலும் நான் அங்கு வந்து உதவி செய்வேன். எல்லோருக்கும் நன்மை செய்வேன். சின்ன சின்ன சேட்டைகள் செய்வேன். அதனால் என் அம்மா அடிக்கவந்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பேன். எனக்கு வேண்டுவததை வாங்கி உண்பேன். அப்போது நான் சொர்க்கத்தில் வாழ்வதனைப் போல் உணர்வேன். மேலும் நான் இந்திய இராணுவத்திற்கு, காவல்துறைக்கு உதவுவேன். எனக்கு பிடிக்காதவர்களைத் துன்புறுத்துவேன். மிகவும் சந்தோசமாக இருப்பேன். என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன்.
S.S அஷ்வதா VIII – D