நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தான் எனது கனவாகும். நான் நன்கு படித்து, பெரிய மருத்துமனையில் பயிற்சி பெற்று மக்களுக்குச் சேவை செய்வேன். நான் ஏழை மக்களுக்கு இலவசமாகச் சிகிச்சை செய்வேன். பணத்திற்காக நான் எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டேன். நான் உலகத்திலேயே மிகப்பெரிய மருத்துவராகத் திகழ்வேன்.
ந. அக்ஷய ஜனனி
ஏழாம் வகுப்பு ஆ பிரிவு
எனது கனவு வனத்துறை அதிகாரி ஆவது தான். இயற்கை வளம், விலங்குகள் மீது எனக்கு மிகுந்த விருப்பம். எனவே காட்டின் உயிரான விலங்குகளையும் செடி கொடிகளையும் பாதுகாப்பேன். அதன் மூலம் எனது நாட்டைப் பாதுகாப்பேன். எனது இக்கனவுக்காக, நான் உழைப்பேன். என் வாழ்வில் அதனை நனவாக்குவேன்.
இரா.ஜெயவர்ஷினி
ஏழாம் வகுப்பு-இ பிரிவு
நான் படிக்கும் இப்பள்ளியிலேயே நான் ஒரு ஆசிரியையாகப் பணியாற்றி எல்லா மாணவர்களையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல பெயர் பெறுவது தான் என் கனவு.இக்கனவு நிறைவேற முயற்சி செய்வேன்.
க.ஹரிணி
ஏழாம் வகுப்பு-இ பிரிவு
தமிழா!!!
தமிழா உறங்காதே!
தமிழை நீ மறவாதே!
தமிழை இனியும் இழக்காதே!
ஆங்கிலத்தை ஏந்தாதே
தமிழை அவமதிக்காதே
கலாச்சாரத்தை அழிக்காதே
என் வார்த்தையைப் பொய்யாக்காதே
தமிழுக்காக என்ன முடியுமோ செய்
தமிழுக்காக உழைக்க முயற்சி செய்
பிறமொழியை நம்புவது சுத்தப்பொய்
நமக்கு வேண்டாம் ஆங்கில நோய்
தமிழுக்காக உன் வியர்வையைச் சிந்திடு
தமிழை நீ காத்திடு
தமிழின் தொன்மை அறிந்திடு
நான் தமிழனென தலை நிமிர்ந்து நடந்திடு
விஷ்வா
ஏழாம் வகுப்பு ஈ பிரிவு
எனது கனவு சிறந்த மருத்துவராவதுதான், ஏனெனில் உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் என்பது முக்கியம்.அந்த உயிர் இல்லையென்றால் அவன் இறந்து விடுவான். நம் நாட்டில், பல ஏழை மக்கள் உயிருக்காகப் போராடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை அரசு மருத்துவமனையைச் சார்ந்து தான் இருக்கிறது. அப்படிப்பட்ட அரசு மருத்துவமனையில் சரியான வசதிகள் இல்லை. அதனால் என் மாத வருமானத்தில் 20% அரசு மருத்துவமனையை நவீனப்படுத்துவதற்காகத் தருவேன். நம் நாட்டை நோயாளிகளற்ற சிறந்த நாடாக மாற்றுவதற்கு என்னால் முடிந்தவரை நான் போராடுவேன். இதுவே என் கனவு ஆகும்.
மேரி ஷெரின்
ஏழாம் வகுப்பு-ஈ பிரிவு
மாவட்ட ஆட்சியாளராக ஆவது தான் என்னுடைய கனவாகும். நாட்டை நல்ல முறையில் வழி நடத்தவும், அரசாங்கத்தையும் நல்ல முறையில் கொண்டு செல்வதும் எனது கடமையாக நினைக்கிறேன். அத்துடன், ஏழை மக்களுக்கு சேவை செய்தும் தவறு செய்பவர்களைத் திருத்தவும் செய்வேன். மேலும் என் மக்களுக்காக இலவச உணவு, மருத்துவம், வீடுகள், உடைகள் மற்றும் தண்ணீர் வசதிகளை அமைத்துத் தருவதுடன் மக்களைப் பேணிப் பாதுகாப்பேன்.
பி.சுஸ்மிதா
ஏழாம் வகுப்பு-ஆ பிரிவு
எனது கனவு என்னவென்றால், நான் ஒரு கணினி இயந்திர ஆய்வாளராக வேண்டும் என்பதுதான். அவ்வாறு ஆனதும் என் நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். நான் ஓர் இயந்திர மனிதனை உருவாக்கி அதன் புகழை உலகம் முழுவதும் பரவச் செய்வேன். அதனை நம் இந்திய இராணுவத்திற்கும் உதவி செய்யும் வகையில் வடிவமைப்பேன். அது ஏழைகளுக்கும் சாதாரண மக்களுக்கும் உறுதுணையாக அமைவதுடன் நம் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும். அது மட்டுமன்று; அது குற்றம், செய்பவர்களையும் தண்டிக்கும்; நல்லவர்களுக்குக் கேடு செய்ய நினைப்பவரிடமிருந்து காப்பாற்றும். இது தீவிரவாதத்தையும் அழிக்கும்.
“ஜெய்ஹிந்த்”
த.அவந்திகா
ஏழாம் வகுப்பு-ஆ பிரிவு