என்னைப்போல் இன்னொருவரைக் கண்டால்…
என்னைப் போல் குணம் உள்ள ஒரு பெண்ணை நான் தற்செயலாக வழியில் செல்லும் போது பார்க்க அவள் என்னிடம் வழி காட்ட உதவி கேட்டாள். அப்போது நான் அவளைப் பார்த்தேன். நானும் அவளும் நல்ல தோழிகளானோம். அவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல் இருந்தது. அவளுக்கு என்னைப் போல் குணங்கள் இருக்கிறது. அவள் பிறருக்கு எந்நேரத்திலும் உதவி செய்வாள். பிறரிடம் நிறைய அன்பு செலுத்துவாள். ஆனால் அதை வெளியே காட்ட மாட்டாள். இவ்வாறு என்னைப் போலவே இருக்கும் அவளைக் கண்டேன். நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். இந்த மாதிரி எல்லோருக்கும் நடக்காது. இது அதிசயமானது. கடவுள் கொடுத்த வரமாகும். இந்த மாதிரி விஷயங்கள் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் நடக்கும். உலகில் நம்மைப் போலவே ஏழுபேர் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்மைப் போல் உருவமும் குணமும் உள்ளவரை நாம் கண்டறிந்தால் இன்பமோ இன்பம்தான்.
கோ.கா. பத்மஸ்ரீ IX- C
பார்த்தவுடன் அவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வேன். மற்றும் என் நண்பர்களிடம் அறிமுகம் செய்வேன். அந்தப் புகைப்படத்தை முகநூலில் வெளியிடுவேன். மற்றும் அனைவரிடமும் அவன் எனது தம்பி எனக் கூறி மகிழ்வேன். அவனிடம் எனக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்வேன். இருவரும் சேர்ந்து பாடல்கள் கேட்போம். திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்கள் பார்ப்போம். இணைந்து ஓவியங்கள் வரைவோம். அத்துடன் எனது பள்ளியில் அவனைப் படிக்க வைத்து நண்பர்களாயிருந்து மகிழ்வோம்.
சு. கமலக்கண்ணன் IX -C
நான் என்னைப் போல் இன்னொருவரைக் கண்டால், முதலில் அவரை எனக்குப் பதிலாக பள்ளிக்கு அனுப்பி பாடங்களைக் கற்று வரக் கூறுவேன். என் வீட்டுப்பாடங்களைச் செய்ய வைத்து, வாய்க்கு ருசியாகச் சமைக்கச் சொல்வேன். அவனுக்குச் சண்டையிடக் கற்றுக் கொடுத்து என்னை அடிப்பவர்களைத் தண்டிக்கச் செய்வேன். இயந்திரம் செய்ய உதவி கேட்பேன். நான் எடுக்கும் சிறு படங்களில் எனக்குப் பதிலாக நடிக்க வைப்பேன். அம்மா கடைக்கு செல்லச் சொன்னால் அவனை அனுப்பி வாங்க வைப்பேன். அவனுக்கு என்னைப் போல் உணர்வுகளைக் கொடுத்து சில, பல மாற்றங்கள் கொண்டு வந்து ஒரு புதிய மோனேஷாக உருவாக்குவேன்.
MONESH.C IX A