
என் மனம் கவர்ந்த நிகழ்வு…
என் பாட்டியின் வீடு ஒரு அனாதை ஆசிரமதிற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு நாள் நான் அங்கு சென்ற போது, ஒருவர் தன் வீட்டில் வளர்ந்த நாயை ஒரு பெட்டியில் போட்டு தெருவில் விட்டுச் சென்றார். அந்த நாய் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. ஆனால் அதற்குக் கால் ஒடிந்து இருந்தது. அதனால் தான் அவர் அந்த நாயைத்தெருவில் விட்டுச் சென்றார். அதை யாருமே பார்க்கவில்லை. அப்பொழுது ஆசிரமத்திலிருந்து ஒரு ஊனமுற்ற குழந்தை அந்த நாயை எடுத்துக் கொண்டு சென்றது. அதைப் பார்த்த நான் இனி என் வாழ்வில் எல்லோரையும் மதிக்க வேண்டும் எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என உறுதி மேற்கொண்டேன்.
காருண்யா ஸ்ரீ VII– A
நான் ஒருமுறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பேருந்தில் ஒரு கண்தெரியாத மனிதர் ஏறினார். எப்பொழுதும் இவர்போல் ஊனமுற்றோர் ஏறினால் ஏதேனும் பாட்டுப்பாடி தானம் கேட்பர். ஆனால் இவரோ தன் கையில் உள்ள தடியின் உதவியுடன் நேராக பயணச்சீட்டு கொடுப்பவரிடம் சென்று உரிய பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கினார். பிறகு தன் பையிலிருந்து சில பேனாக்களை எடுத்து விற்க ஆரம்த்தார். எல்லோரும் ஒரு கண்தெரியாதவர் பொருள் விற்பதனைப் பார்த்து வியந்தனர். அவரிடம் பேனாவும் வாங்கினர். பிறகு நான் அவரிடம் சென்று “எப்படி உங்களால் கண் தெரியாத போதும் பேனாக்கள் விற்க முடிகிறது?” எனக் கேட்டேன், அதற்கு அவர், “ நான் எப்பொழுதும் பிறரிடம் கையேந்தி நிற்காமல் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என விரும்புவேன். அதனால் என் கண்கள் தெரியாத போதும் மன தைரியத்துடன் பல செயல்களைச் செய்கிறேன்” என்றார். அவரின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன். நானும் அவரை ஊக்கமளித்து இரு பேனாக்கள் வாங்கிக் கொண்டேன். இதுவே என் மனம் கவர்ந்த நிகழ்வாகும்.
மு.ஷாலினி VII– A
என் மனம் கவர்ந்த நிகழ்வு என் பிறந்தநாள். என் பிறந்தநாளன்று உணவகத்திற்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு ஏழைச் சிறுவன் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவனைக் கவனித்து உள்ளே அழைத்தோம். அச்சிறுவனுக்கு அவன் என்னவெல்லாம். கேட்கிறானோ வாங்கித்தந்தோம். இரசீது வந்தது. என் அண்ணன் ஒரு பக்கம் மிக மகிழ்ச்சியாக இருந்தாலும் காசு அதிகமாக ஆகிவிடுமோ என்னும் அச்சத்தில் இரசீதைப் பார்த்தார். பார்த்ததும் அவர் முகத்தில் புன்னகை. ஏனெனில், அதில். “மனதார உதவி செய்வோரிடம் கட்டணம் வாங்குவது இல்லை என எழுதப்பட்டிருந்தது. இது தான் என் மனம் கவர்ந்த நிகழ்வு.
மு. ஸ்ரேயா VII – B
புரட்டாசி அல்லது ஐப்பசி மாதத்தில் வரும் நவராத்திரியில் நடந்த நிகழ்வுகள் என் மனம் கவர்ந்தவை. பொம்மைகளை அடுக்கி சந்தனம் குங்குமம் வைத்து பொம்மை ரூபத்தில் இருக்கும் கடவுள்களை வணங்கி குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அழைத்து மங்கலப் பொருட்களைக் கொடுத்து நவராத்திரியைக் கொண்டாடினோம். அந்த ஒன்பது நாட்களில் ஒன்பது துர்க்கையை வேண்டுகிறோம். அந்நாளில் நான் என் நண்பர்களை அழைத்து விளையாடி, ஆடி, பாடி மகிழ்ந்தேன். அந்நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது.
க. ஸ்ரீ பூமிஜா VII–B