
காமராசர்
கார்வண்ண நிறம் தாங்கி,
கதர் ஆடை மேல் உடுத்தி,
தீரர் சத்திய மூர்த்தி வழிபற்றி,
திண்ணமாய் நின்றவர் காமராசர்
அவரென்றும் விரும்பாதது காசு,
நமக்கெல்லாம் அவரொரு தமிழ்நாட்டு ஏசு
படைக்கும் இறைவனே காக்கும்
பணியை மறந்து போக
பரிதவித்த பிஞ்சுகளின் பட்டினிக்கு
இலவசமாய் மதிய உணவு தந்த
இன்னொரு கடவுள்
பொது வாழ்வில் “எளிமை”
வார்த்தைகளில் “வாய்மை”
எண்ணங்களில் “தூய்மை”
செயல்களில் “நேர்மை”
இத்தகைய தன்மைகளைக் கொண்ட
“பெருந்தலைவரை” என் வழிகாட்டியாகக் கருதுகிறேன்.
ச. சுகேஷ் VIII – B