வாழ்க்கை என்னும் கடலைக் கடக்கும் பயண அனுபவம் மனிதர்களுக்குள் வேறுபடும். வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் படகே நாம் பயிலும் கல்வியாகும். கடலில் நம்மை அழிக்கும் திமிங்கலமும் இருக்கலாம், இன்பம் தரும் கடல் ஓசையும் இருக்கலாம். அதனைப் போல் நம் வாழ்க்கையிலும் நன்மை செய்யும் மனிதர்களும் இருக்கலாம். தீமை செய்யும் நண்பர்களும் இருக்கலாம். இதனை உணர்ந்து நம் வாழ்வு என்னும் கடல் கடக்க சிறப்பான பயணமாய் அமைய நல்ல நண்பரோடு கைகோர்ப்போம்.
செ.பிரியதர்ஷினி
பத்தாம் வகுப்பு-‘அ’ பிரிவு