இவ்வுலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. ஆம்! சிலருக்குக் கண்களும், தேவையான நேரத்தில் இரத்தமும் கிடைப்பதில்லை. கண் இல்லாத அவர்களும் இவ்வுலகில் ஆனந்தமாக இருப்பதற்கே பிறந்துள்ளனர். இவ்வுலகில் எல்லோரும் மகிழ்வுடனும் ஒற்றுமையாகவும் இருக்கவே கடவுள் நம்மைப் படைத்துள்ளார்.ஆகவே நாம் உயிருள்ள வரை உதவி செய்து மகிழ்விக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போது இரத்ததானமும்; உயிர் பிரிந்தபின் கண்தானமும் செய்யப் பதிவு செய்ய வேண்டும். நாம் தரும் இரத்தம் ஒருவருக்குப் புது வாழ்வையும் நாம் தரும் கண்களால் ஒருவர் புது உலகையும் காண முடியும்.
“கண் மற்றும் இரத்த தானம் செய்யுங்கள்,
பிறரை வாழ்வியுங்கள்’……..
ஹ.மதுகாயத்ரி
எட்டாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு
தானம் என்பது நாம் ஒருவருக்குச் செய்கின்ற மிக மிகப் பெரிய உதவி. நம்மிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்கு மனதாரக் கொடுப்பதே தானமாகும். தானம் என்னும் சொல்லைக் கேட்டால் எனக்கு கர்ணனின் செயல்கள் தான் நினைவில் வருகின்றன. கண், இரத்தம் இவ்விரண்டும் நமக்கு மிகவும் முக்கியமானவை. ஒவ்வொருவரிடமும் விதவிதமான இரத்த வகை உண்டு. இரத்தம் என்பது நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான முக்கியமானதாகும்., ஓர் உயிர் பிழைக்க நாம் சிறிது இரத்தம் கொடுப்பதில் என்ன தவறு?. கண், என்னும் அருமையான உறுப்பை நம்முடன் படைத்திருக்கிறார் இறைவன். ஆனால் சிலர் கண் தெரியாமலும் கண் இல்லாமலும் இருக்கின்றனர். ஒருவர் இறந்த பின்னர் அவர் உடம்பு எதற்கு உதவப் போகிறது என நாம் நினைப்போம். ஆனால் நாம் தரும் அந்த கண்ணால், ஒருவருடைய வாழ்க்கையே மாறலாம். கண் இல்லாதவருக்குத் தானம் செய்தால் அவர் வாழ்வு வளம் பெறுவதுடன் புது வாழ்க்கையையும் நாம் கொடுக்கலாம். நம் உலகில், கண் தெரியாதவர் நிறைய பேர் இருக்கின்றனர், நாம் நினைத்தால் அவர்களின் கண்களைத் திறந்து புது உலகைக் காணச் செய்யலாம்.
ஸ்ரீ.இராஜலெட்சுமி
எட்டாம் வகுப்பு ‘ஈ’ பிரிவு