
கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை,
கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை
கர்ணனுக்குக் கொடை கொடுக்கும் பண்பு பிறப்பிலிருந்தே தோன்றியுள்ளது செய்ந்நன்றி மறந்து செயல்படும் மாறாத பண்புள்ளவன் இறக்கும் தருவாயில் கூடத் தான் செய்த புண்ணியங்கள் அத்தனையும் தானமாக, கொடையாக கிருஷ்ணனுக்கு கொடுத்தார். இதிலிருந்து அவர் ஒரு கொடை வள்ளல் என்பது அனைவருக்கும் நன்கு புரியும். அத்தனையும் தானமாகத் தந்து உலகத்தாரால் ஏற்றம் பெற்றவன் தர்மத் தாயின் ஒரே மகன் கர்ணன். கர்ணன் போன்ற கொடையாளியை இது வரை இந்த அகிலம் கண்டதில்லை. ஆத்மார்த்தமாக மற்றவருக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் கர்ணனைத் தவிர வேறு யாவரிடமும் காண இயலாது.
ம. வர்ஷன் VII – B
கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை,
கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை
இது ஒரு பழமொழியாகும், இப்பழமொழி கர்ணனை புகழும் விதமாக அமைந்துள்ளது. கர்ணன் தான் உலகத்திலேயே மிகப் பெரிய கொடையாளி. கர்ணன் கடையேழு வள்ளல்களில் இடம்பெறவிலலை என்றாலும் அவனின் புகழை இந்த சமுதாயம் இன்றும் பாடிக்கொண்டிருக்கிறது. இப்பழமொழியின் அர்த்தம் என்னவென்றால் தமிழில் உள்ள 12 மாதங்களிலேயே கார்த்திகை மாதத்தில் தான் பெரு மழை பெய்யும். இந்த மாதத்தில் தான், சென்ற வருடம் கூட டிசம்பரில் மழை பெய்தது வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.
கர்ணனின் வாழ்வில் ஒரு மழை நாளின் போது ஒர் அந்தணர் துரியோதனனிடம் சில விறகுக் கட்டைகள் கேட்டார். துரியோதனனோ ‘மழைக் காலம், விறகெல்லாம் கிடையாது’ என அவரைத் துரத்தி விட்டார். அடுத்து அவர் கர்ணனிடம் சென்று விறகுகள் கேட்டார். கர்ணனோ விறகுகள் இல்லையென்றாலும் சற்றும் யோசிக்காமல், தன் காட்டு அரண்மனையில் இருந்த தூண்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். இதனால் தான் கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இலலை கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை என்று கூறுகின்றனர்
க. சுவேதா VII – B