கிராமங்களுக்கு நீ சென்றால்

கிராமங்களுக்கு நீ சென்றால்

 கிராமங்களுக்கு நான் சென்றால் என் மனம் குழந்தையாக மாறிவிடும். நான் என் உறவினர்களைச் சந்திப்பேன் . என் நண்பர்களுடன் விளையாடுவேன்.வயல்களுக்குச் செல்வேன் அவ்வயல்களில் நட்டிருக்கும் village6பயிர்களைக் கண்டு மகிழ்வேன். அப்பயிர்களின் பெயர்களை அறிவேன்.  வீட்டு வாசலில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுப்பேன்.  பூச்செடிகளருகே நின்று புகைப்படங்கள் எடுப்பேன். நாட்டுப்புறப் பாடல்கள் அறிவேன். அங்குள்ள முதியோர் பாடும் பாடல்களைக் கேட்டு இரசிப்பேன். காலையில் வரும் பலவைகையான பறவைகளையும் அதன் குரலையும் கேட்டு இரசிப்பேன். பெரியோருடன் உரையாடுவேன். வயல்களில் நடப்பேன். தோப்புகளில் உள்ள மரங்களை எvillage1ண்ணுவேன். நண்பர்களுடன் நொண்டி , தாயம் ,கண்ணாமூச்சி, அம்மானை, பல்லாங்குழி, பொன்னூஞ்சல் ஆகிய விளையாட்டுகளை விளையாடுவேன். பட்டாம்பூச்சிகளைப் பிடிக்க முயல்வேன். எருக்கஞ் செடிகளின் மலர்களை அழுத்தி வெடிப்பேன். கோவில்களுக்குச் சென்று கடவுளுக்கு பூசைகள் செய்வேன். நண்பர்களுடன் குளங்களில் மீன் பிடிப்பேன். கோவில்களில் கோலம் போடுவேன். இவ்வாறு பல செயல்களைச் செய்வேன்.

பா.சு. நேஹாஸ்ரீ IX -C

கிராமம் என்village5றாலே ஒரு அழகான  சூழல் உள்ள பகுதி. நான் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் கலாச்சாரம்,  பண்பாடு ஆகியவற்றை அறிவேன். அங்குள்ள அழகான வயல் பகுதியை இரசிப்பேன்.  அங்கு எந்த வித தொழில்நுட்பமும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர். அங்குள்ள மக்கள் இயற்கையைச் சார்ந்தே வாழ்வர். அங்குள்ள மக்கள் பயிரிடும் பயிர்களைக் கண்டு இன்புறுவேன்.

                                                     ஷிவானி IX-C

 

 

நான் கிராமங்களுக்குச் சென்றால் முதலில் அருகிலுள்ள ஏரியில் குளிக்கச் செல்வேன். அங்கு நான் மீன் பிடிப்பேன். நாட்டுப்புற உணவுகளாகிய கம்பந்தோசை, களி .கம்பங்கூழ் village3ஆகியவற்றை உண்பேன். அங்குள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுவேன். வயல்களில் விவசாயிகளுக்கு உதவி செய்வேன். என் வாழ் முழுவதும் அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

 நாவல் செல்வன். IX -C

 

 

கிராமங்களுக்கு நான் சென்றால், காலைப்பொழுதில் குயில் கூவும் சத்தம், இயற்கை வளங்கள், குளிர்ந்த காற்று மற்றும் இன்பம் மிகுந்mango2த குடிமக்கள் இதனையெல்லாம் இரசிப்பேன். பின்னர் குளிர்ந்த நீர் நிறைந்த குளங்களைப் பார்ப்பேன்.விவசாய நிலங்களுக்குச் சென்று  பயிர் விளைச்சல் செய்வதைப் பார்ப்பேன் மரங்களில் காய்த்துத்தொங்கும் மாங்காய்,மற்றும் கொய்யாப்பழங்களை உண்டு இரசிப்பேன். இரவு நேரத்தில் பூச்சிகளின் ஒலிகளைக் கேட்பேன். வண்ணத்துப்பூச்சியின் வண்ணம் நிலாவின் ஒளி, பறவைகளின் கூடு, ஆகியவற்றைக் கண்டு இரசிப்பேன். ஏரியின் ஓரத்தில் புல் வளர்ந்திருப்பதைப் பார்ப்பேன். சூரியன் மறையும் காட்சி,அரிய மூலிகைகள் ஆகிய கண்டு இரசிப்பேன்.

                                          க வாசுதேவன்.

                              ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு.

நான் கிfood1ராமங்களுக்குச் சென்றால் மிகவும் இன்பமாக இருப்பேன். ஏனென்றால் கிராமங்களில் நிம்மதியாக வாழ்வேன். சுற்றுச்சூழல்  மிகவும் நன்றாக இருக்கும்.  நான் மாசற்ற காற்றைச் சுவாசிப்பேன். நான் அங்கிருக்கும் மரம், செடி, கொடியோடு புகைப்படம் எடுப்பேன். வீட்டிற்கு வெளியே இருக்கும் பூக்களைப் பறித்து மாலையாய்க் கொடுத்து சுவாமிக்குச் சாற்றுவேன். கிராமங்களில் உண்ணும் உணவை நானும் இரசித்து ருசிப்பேன். அக்காலத்து வீடுகளைப்பார்த்து இரசிப்பேன்.அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத்தை அறிந்து கொள்வேன்.  நாட்டுப்புறப் பாட்டுகளைப் பாடச்சொல்லிக் கேட்பேன். குயிலின் குரலைக்கேட்டு மகிழ்வேன்.

இரா.ம.ஜனனி

                              ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு

நான் கிராமங்களுக்குச் சென்றால் அங்குள்ள மக்களைக்காண்பேன்.அவர்கள் உண்ணும் உணவை நானும் உண்டு இரசிப்பேன்.அங்குள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள இறைவனை வழிபாடு செய்வேன்.கண்ணிற்கு எட்டும் தூரம் வரை  பச்சைப்பசேலென இருக்கும் வயல் வெளிகளைக் கண்டு இரசிப்பேன். அங்கு வாழும் ஏழைஎளிய மக்களுக்கு என்னால் முடியும் உதவி செய்வேன்.அங்குள்ள பூக்களைக் கண்டு இரசிப்பேன். மழையால் ஆறு போல் ஓடும் பொன்னி நீரைக் கண்டு இரசிப்பேன். அவர்களுடன் நான் ஒரு நாள் கழிப்பேன். அங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்யும் அழகைக் கண்டு இரசிப்பேன் மற்றும் நானும் கற்றுக்கொள்வேன்.

ஊரெங்கும் பச்சைக் காடு …………….former1

மகிழ்ச்சியான வழிபாடு ………………

ஆரோக்கியமான உணவு உண்ணலாம்

சுத்தமான நீர் பருகலாம்

கிராமங்களில் நாமிருந்தால்

வாழ்ந்திடலாம் நோய்நொடி யின்றி              .

சு.பிரியதர்ஷினி

ஒன்பதாம்வகுப்பு’இ’பிரிவு

poll1நான் கிராமங்களுக்குச் சென்றால் அங்குள்ள மக்களுக்கு அங்குள்ள தொழிற்சாலையின் அழுக்கு நீர் ஆற்றில் கலப்பதை எடுத்துக்கூறுவேன்.அது மட்டுமல்லாமல் அதிகாரிகளிடம் மருத்துவமனை வசதி செய்து தருமாறு பணிவுடன் கேட்பேன். ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியில் சேர வாய்ப்பு தருவேன்.இலவச வீடுகள் மற்றும் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் சரியாக நடக்கிறதா எனக் கண்காணிப்பேன். மேலும், ஒவ்வொருவருக்கும் அல்லது  முடிந்தவரை தொலைபேசி வசதி  ஏற்பாடு செய்து கொடுப்பேன். குழந்தைத் தொழிலாளி இருக்கக் கூடாது என கிராம மக்களுக்கு எடுத்துரைப்பேன்.கிராமங்களில் உள்ள விவசாய நிலம், நீர்வீழ்ச்சி ஆகியனவற்றைச் சுற்றிப் பார்ப்பேன். விவசாய மக்களுக்கு நச்சுத்தன்மையில்லாமல் பயிர் விளைவிப்பது பற்றிச் சொல்வேன்.

V. ஹரிஷ்

                              ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு

village7நான் கிராமங்களுக்குச் சென்றால், முதலில் அங்குள்ள ஓர் பள்ளிக்குச் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடுவேன். அங்கு வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்வேன். அவர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களது துயர்களை நீக்குவேன். அவர்களுடைய வயல் வெளிகளுக்குச் சென்று விவசாயத்தைக் கற்றுக் கொள்வேன். பிறகு அந்த கிராமத்துச் சிறுவர்களுடன் விளையாடி மகிழ்வேன்.

செ.விக்னேஷ் பாலாஜி IX-A

 

 

கிராமங்களுக்கு நான் சென்றால், அங்கு வாழும் என் சொந்தக்காரர்களைக் கண்டு மகிழ்வேன். அவர்கள் பயிரிடும் நிலங்களைப் பார்ப்பேன்village8. விவசாயம் செய்வது எப்படி? என்பதை அவரிகளிடம் கேட்டு அறிந்து கொள்வேன். அவர்களின் வருமானத்தையும் அறிந்து கொள்வேன். எங்கள் நிலத்தில் உள்ள பச்சைப் பயிர்களை பார்த்து மகிழ்வேன். இந்த கிராமத்தில் வாழும் விவசாயிகளின் நிலையை அறிந்து கொள்வேன். என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்து கொடுப்பேன். அவர்கள் பயிரிடும் பயிர்களுக்குப் போடும் உரத்தை அறிந்து கொள்வேன். விவசாயிகளின் வாழ்க்கையை அறிந்து கொள்வேன். எங்கள் உறவுகளிடம் பேசி மகிழ்வேன். அவர்களிடமிருந்து ஆசிபெற்று அந்த கிராமத்திலிருந்து விடை பெறுவேன்.

சி.ரா. சூரியா IX-A

former4நான் கிராமங்களுக்குச் சென்றால் அங்குள்ள சத்துள்ள ஆரோக்கியமான காய், கனிகளை உண்பேன். அங்கு இருக்கின்ற ஏழை மாணவர்களுக்கு காசும், சாப்பிட உணவும் கொடுப்பேன். அங்கு இருக்கின்ற பள்ளிகளைச் சரியாகச் சீரமைத்து அங்கு வாழ்கின்ற குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல வைப்பேன். கிராமங்களில் உள்ள வயல்களில் என் நண்பர்களுடன் விளையாடுவேன். அந்த வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளிடம் இருந்து விவசாயம் கற்றுக்கொள்வேன். அங்கு வயலில்  வேலை செய்பவர்களுக்கு உதவியாக இருப்பேன்.

THIYANESHWARAN.S IX – A

former3நான் கிராமங்களுக்குச் சென்றால் நான் அங்கு உள்ள விவசாய முறை பற்றித் தெரிந்து கொள்வேன். ஒரு சில நாள் நானும் விவசாயம் செய்வேன். அங்குள்ள விவசாயிகளுக்கு நான் ஒரு சில யோசனைகளை கூறுவேன். நான் என் பள்ளியில் படித்த ஒரு சில முறைகளை அவர்களிடம் கூறுவேன். விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வேன். அவர்களின் பழக்க வழக்கம் பற்றியும் தெரிந்து கொள்வேன்.

LOVESH KUMAR IX-A

 

 

எனக்கு கிராமங்களுக்குச் செல்ல மிகவும் பிடிக்கும். நான் கிராமத்திற்குச் சென்றால் அங்கு உள்ள well1குழந்தைகளுடன் கூடி மகிழ்வுடன் விளையாடுவேன். அந்த கிராமத்தை நான் முழுவதும் சுற்றிப்பார்ப்பேன். அங்கு இருக்கும் கோவில்களுக்குச் செல்வேன். அவர்களுடன் சேர்ந்து விவாசயத்தைக் கற்றுக்கொள்வேன். அங்கு உள்ள மாட்டுத் தொழுவம், பால்பண்ணைகளுக்குச் செல்வேன். என் தம்பியுடன் அங்குள்ள கிணறுகளுக்குச் சென்று விளையாடுவேன். அங்குள்ள கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்வேன்.

இரா. தீபிகா IX-A

vill3நான் கிராமங்களுக்குச் சென்றால் அங்கு இருக்கும் வயல்வெளிகளைத் காண்பேன். அங்குச் செய்யும் மருத்துவத்தை நம் ஊர்களுக்குச் செய்து தருமாறு கேட்பேன். அங்கு இருக்கும் தண்ணீர் கிடைக்கும் குளத்தில் விளையாடுவேன். அதன் பிறகு அங்கு இருக்கும் இடங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வருவேன். நான் விவசாய நிலத்தில் பயிரை நடுவேன். அதை அங்கு வசிக்கும் மக்களிடமிருந்து அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டு இங்கு வந்து நான் அதைச் சேவையாகச் செய்வேன்.

பிரியதர்ஷினி IX A

vill4கிராமங்களுக்கு நான் சென்றால் அங்கு வாழும் மக்களிடம் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவர்களின் பண்பாட்டைத் தெரிந்துக்கொள்வேன். அவர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் பற்றி அறிந்து கொள்வேன். அப்பகுதியில் வாழும் மக்களுடன் ஏற்றத்தாழ்வின்றி அன்பாகப் பழகுவேன். அங்கு இருக்கும் பழமையான கோவில்களுக்குச் சென்று அதன் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வேன். அவர்களிடம் இருந்து என் படிப்பிற்கு உதவும் செய்திகளையும் பெற்றுக்கொள்வேன். கிராமம் என்றாலே வயல், காடு, மலை, பசுமையான இடம் என்று நாம் கூறுவோம். அதனையெல்லாம் நான் கிராமத்தில் காண விரும்புகிறேன். மலைகள், மலைகள் அருகில் உள்ள அருவி, பூந்தோட்டம், தென்னந்தோப்பு, போன்றவற்றையெல்லாம் நான் அக்கிராமத்தில் காண ஆசைப்படுகிறேன். கிராமங்களுக்குச் சென்றால் அங்குள்ள உயரமான மலைகள், பசுமையான வயல்கள், அருவிகள் ஆகியவற்றையெல்லாம் கண்டு கழிப்பேன். இனிமையாகவும் [தூய] தமிழில் பேசும் கிராம மக்களுடனும் இரண்டு நாட்கள் தங்கிருந்து மனம் மகிழும்படி நான் அவ்விரண்டு நாட்களையும் இன்பமாகக் கழிப்பேன்.

சீ. மதுமிதா IX-A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *