சவால்களைஎதிர்கொள்ள

நம் வாழ்க்கை எப்பொழுதும் சுலபம் கிடையாது. சவால் நிறைய இருக்கும் அதை எதிர்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.அதை எதிர்கொள்ள நமக்கு தைரியம் வேண்டும்.அதை எதிர்கொண்டு நாம் வாழ்வைக் கற்றுக்கொள்ளவேண்டும்இதுவேஎன்கருத்தாகும்

எஸ்.   சிவப்பிரியா,

ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு,

நான் ஒருநாள் என் அம்மாவிடம் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெறுவேன் என்று சத்தியம் செய்தேன்.அதில் நான் பரிசுபெற்றேன்.அடுத்து நான் என்னுடைய தேர்வில் கணிதப் பாடத்தில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றேன்.பின்னர் நான் அதில் நல்லமதிப்பெண் பெறுவேன் என என் அம்மாவிற்கு வாக்களித்தேன். அதைப்போல் நான் நன்றாகப்பயிற்சி செய்து நல்லமதிப்பெண் பெற்றேன் . என் அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.அதிலிருந்து நான் என் அம்மாவிற்கு வாக்களித்தால் அதை எல்லாம் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை பெற்றேன்.

இர.வைஷாலி.

ஏழாம்வகுப்பு ‘இ’ பிரிவு

நம் எல்லோர் வாழ்வும் சாகசங்கள் நிறைந்தது.ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றுள் சில மிககடிதாகவும் சில மிகஎளிதாகவும் அமையும்.எதிர்கொள்ளவே முடியாது என்று எதுவும் இல்லை.முதலில் நாம் எதைக்கண்டும் அஞ்சக்கூடாது, பயமே நம் தோல்விக்குக்காரணம்.தன்னம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளத்தயாராக இருக்க வேண்டும்.

முயற்சி திருவினையாக்கும்; முயன்றால் சாதிக்க முடியும்.

பா.வைஷ்ணவி

ஏழாம்வகுப்பு ‘ஆ’பிரிவு

நம்வாழ்க்கையில்நாம்சவால்களைஎதிர்கொண்டால்மட்டுமேசாதிக்கமுடியும்.அப்படிப்பட்டசவால்களைஎதிர் கொள்ள நாம் தினமும் பயிற்சி எடுக்க வேண்டும்.சவால்கள் என்பது வெற்றிக்குப் பின்னே மாயமாக இருக்கும்.நாம் ஒரு சவாலை எதிர் கொள்ள வேண்டுமெனில் ஒருகால் பந்துவீரனைப்போல சகவீரர்களின் எதிர்ப்பைத்தாண்டி ‘கோல்’ அடிக்கவேண்டும். வாழ்க்கையில் நாம் எதிர் கொள்ளும் சவால்களை ஒருவிளையாட்டு வீரனைப்போல முயற்சியும்  பயிற்சியும் செய்தால் வென்றிடலாம்.

விடாமுயற்சியேவிஸ்வரூபவெற்றி!!!

க. சஹானா

ஏழாம்வகுப்புஆபிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *