எனக்கு செவ்வாய் கிரகம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நான் முதலில் செவ்வாய் கிரகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தில் என்னால் முடிந்தவரை அனைத்து விபரங்களையும் சேகரித்து படித்துத் தெரிந்து கொள்வேன். நான் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் வழியில் கூட என் நேரத்தை வீணடிக்காமல் நான் பல நாள் காத்திருந்த விண்வெளி பற்றித் தெரிந்து கொள்வேன். வளிமண்டலம் வழியாக செவ்வாய் கிரகத்தில் எனது முதல் அடியைப் பதிப்பேன். அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் செய்வேன். முக்கியமாக, செவ்வாய் கிரகத்திலிருந்து வான்வெளி பார்க்க எவ்வாறு உள்ளது என்பதையும் எனது நினைவுகளில் பதிவு செய்வேன். எனது பயணம் சிறந்ததாக அமையும்.
மா.அனுபல்லவி
எட்டாம் வகுப்பு – ஈ பிரிவு
எனக்கு செவ்வாய்க் கிரகம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், செல்லும் முன்னே செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி அறிவேன். செவ்வாய் கிரகம் பூமிக்கு அடுத்த கிரகமாகும். அது சிவப்பு நிறத்தில் இருப்பதால், அது சிவப்பு கிரகம் எனப்படுகின்றது. இரும்பு ஆக்சைடு அந்த மண்ணில் இருக்கிறதால் அதன் நிறம் சிவப்பு நிறமாகத் தோன்றுகிறது. செவ்வாய்க் கிரகம் ஆங்கிலத்தில் மார்ஸ் எனப்படும். மார்ஸ் என்ற சொல் ரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் சொல். மார்ஸ் என்னும் கடவுளுக்கு ஏரீஸ் என்னும் கிரேக்கப் பெயர் இருக்கிறது. அந்த கிரேக்கச் சொல்லிலிருந்துதான் மார்ஸ் என்னும் பெயர் வழங்கப் பெற்றது.
செவ்வாய்க் கிரகத்தில் காற்று மிகவும் குறைவு. கதிரவனின் புற ஊதாக் கதிர்களால் நம் உடல் நலம் பாதிக்கும். அக்கதிர்கள் கடினமில்லாமல் கிரகத்தினுள் நுழையும். அவற்றை அறிந்து கொண்டே அக்கிரகத்துக்குள் செல்வேன். அங்கு சென்றவுடன் மண் பரிசோதனை செய்து அந்த நிலத்தைப் பற்றி அறிந்து கொள்வேன். அங்கு நான் ஒரு விண்வெளி நிலையம் அமைத்து அதற்கு என் பெயரைச் சூட்டுவேன். அந்நிலையத்தில் மிகவும் சிறந்த தொழில் நுட்பத்தை அமைப்பேன். செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழும் சூழல் உருவாக்குவேன். பயிர் விளையும்படி செவ்வாய்க் கிரகத்தைப் பூமி போல மாற்றி அமைப்பேன்.
ச . அகிலன்
ஏழாம் வகுப்பு ‘அ’ பிரிவு