உலகிலேயே மிகவும் அற்புதமான,நம்ப முடியாத சாதனை செய்பவர்கள் யாரெனில் எப்போதும் தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களே அருஞ்சாதனை புரிந்த தாமஸ் ஆல்வா எடிசன், ஹெலன் கெல்லர், பீத்தோவன், மைக்கேல்பாரடே, ஜான்சன் முதலானோர் தன்னம்பிக்கையோடு வாழ்ந்த மாற்றுதிறனாளியரே.தன்னம்பிக்கை ஒன்றனையே இவர்கள் தம் வாழ்வில் குறிக்கோளாகக் கொண்டார்கள்; வெற்றி கண்டார்கள்.
நான்கு வயதில் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால், இனி நடக்கவே முடியாது என மருத்துவரால் கூறப்பட்ட வில்மா ருடால்ப் என்னும் பெண்மணி, தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கைவிடவில்லை. இடைவிடாத பயிற்சியும் துணிவும் கொண்டு விளங்கிய வில்மா, பதின்மூன்று வயதில் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொண்டாள். 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தார்.
தன்னம்பிக்கை தான் வாழ்வின் உயிர்நாடி தன்னம்பிக்கை இருந்தால் நம் விதியைக் கூட மாற்றிச் சாதனை படைக்கலாம் என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த சான்றாகும்.
ப. விஷால்
பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு