- நான் பறவையானால் ஒரு மயிலாகத் தான் ஆவேன்.
- என்னிடம் இருக்கும் அழகான இறக்கைகள் கொண்டு நான் சுதந்திரமாகப் பறப்பேன்.
- எங்கேயாவது செல்ல வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டாம்.
- உழவர்களுக்கு நல்ல நண்பனாக இருப்பேன்.
- மேகத்தின் குளிர்ந்த காற்றைச் சுவாசிப்பேன். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி ஒரு சுதந்திரமான வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது இந்த ஆசை நிறைவேற வேண்டும்.
- மழை பெய்தால் நான் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து எல்லாரும் என்னைப் புகழ்ந்து பேசுவார்கள். அதை நினைத்தாலே என் மனம் மகிழ்ச்சியடைகிறது.
- இப்படி ஒரு சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். என இறைவனை வேண்டுகிறேன்.
ச. அக்ஷிதாகுமாரி
ஆறாம் வகுப்பு-‘ஈ’ பிரிவு