
நான் மரமாக மாறினால் அனைவருக்கும் நிழல் தருவேன். அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான காற்று அளித்து, நோய் வராமல் காப்பேன். நிலவளம் மற்றும் பூமியின் நீர் வளத்தையும் காப்பேன். மக்கள் அனைவருக்கும் இனிய கனிகள் மற்றும் காய்கள் தந்து அவர்களை மகிழ்விக்கச் செய்வேன். நிறைய பூ மற்றும் காய் காய்த்து நல்ல விதைகளை அளித்து எனது சந்ததிகளைப் பெருக்குவேன். நான் உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் தருவேன். ஆதலால், மக்களாகிய நீங்கள் என்னை நிறைய இடங்களில் நட்டுப் பயனடையுங்கள். என்னை வெட்டாதீர்கள்.
திரவீணா VIII A
நான் மரமாக மாறினால் முதலில் என்னை மரமாக்கிய இறைவனை வணங்குவேன். ஒரு மரமாக வாழ்வில் துன்புறும் ஏழை மற்றும் வளமாக வாழும் மனிதர்கள் அனைவருக்கும் என் பழங்களும், காய்களும் தருவேன். எனக்கு குழந்தைகள் என்றால் உயிர். அவர்கள் இரசிக்கவும் மகிழவும் நான் பெரியதாக வளர்வேன். இவ்வுலகில் வாழும், மக்கள் உயிர் வாழத் தேவையானது காற்று மட்டும் தான். அதற்கு நான் “கரியமிலவாயு” என்னும் வாயுவை சுவாசித்து மக்களுக்கான பிராணவாயுவை வெளியேற்றி அவர்கள் சுவாசிக்க உதவுவேன். ஆனால், இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு என்னைப் பற்றிய கவலையே இல்லை. அதனால் நான் தற்போது குறைந்து கொண்டே வருகிறேன். எங்கள் குடும்பத்தையே நவீன உலகம் அழிக்கின்றது. இதற்கு தீர்வே இல்லையா? நாங்களும் உயிர் வாழும் பிராணிகள் தானே. நாங்கள் வீடுகள் கட்டவும், உங்களின் வீடுகளை அலங்கரிக்கவும் பயன்படுகிறோம். அதனால், எங்களையும் குடும்பத்தில் ஒருவராகக் கருதுங்கள் என்று கூறி என் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சு. சுதிக்க்ஷா VIII – B
நான் மரமாக மாறினால் நான் மிக மகிழ்ச்சி அடைவேன். மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றை வழங்குகிறேன் என்ற பெருமை எனக்கு இருக்கும். நான் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வேன். வெயிலில் உழைக்கும் மக்களுக்கு நிழல் கொடுத்து உதவி செய்வேன். உலகில் வாழும் நிறைய உயிர்களுக்கு மரம் தான் வரம் என்பதை உணர்த்துவேன். நான் பணக்காரர், ஏழை என்பதைப் பார்க்காமல், எல்லோருக்கும் சமமாக காற்று, காய்கள், பழங்கள் வழங்குவேன் மரங்களை வெட்ட வருபவர்களுக்கு கடும் தண்டனை தருவேன்.
சபரி கணேஷ். கி, VIII – D
நான் மரமாக மாறினால் நல்ல தூய காற்றை அளித்து மக்களுக்கு புத்துணர்வு அளிப்பேன். மழையின்றி வறட்சியால் பாதிப்பு அடைய விடமாட்டேன். உடல் சருமத்திற்கு நன்மை அளிப்பேன். வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழலைத் தருவேன். நல்ல அருமையான காற்றையும் தந்து அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வேன். என்னை வளர்ப்பதன் அவசியத்தைப் புரிய வைப்பேன்.
ம. வினியோஜிதா VIII – D