
நினைவில் நின்ற ஒருநாள்
கோடைகால விடுமுறை அன்று, நான் என் குடும்பத்துடன் சுற்றுலாவாகக் குற்றாலம் சென்றேன். அங்கு நான் ஐந்தருவியில் குளித்தேன். முதலாவதாக, பழைய குற்றாலத்தில் நான் என் சகோதரர்களுடன் குளித்தேன். நாங்கள் அனைவரும் அதன் பிறகு புதிய குற்றாலத்தில் குளித்தோம். இறுதியில், ஐந்தருவியில் குளித்தோம். அங்கு நான் நிறைய குரங்குகளைக் கண்டேன். வீடு திரும்பும் வழியில், நல்ல நிழலான இடத்தைக் கண்டு அங்கு நாங்கள் மதிய உணவு உண்டோம். நாங்கள் அனைவரும் சிரித்து விளையாடி மகிழ்ந்தோம். அந்த நாள் என் நினைவிலிருந்து என்றும் நீங்காது. இது என் வாழ்நாளில் இன்றியமையாத நாளாகக் கருதுகிறேன். அங்கு கேமராவில் எடுத்த படங்களை வீட்டில் அனைவரும் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பார்த்தோம். இனி, இது போல் ஒரு நாள் என் வாழ்வில் மீண்டும் வராதா என்று ஏங்குகிறேன்.
மு.நா.நிஷ்டா VIII – C
அன்று அக்டோபர் 15 ஆம் நாள் மாநில அளவிலான போட்டிக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அப்பொழுது நான் எங்கள் வீட்டில் என் அறையில் படித்துக்கொண்டிருக்கும் போது என் அம்மா ஆனந்தக் கண்ணீர் சிந்திக் கொண்டே என் அறைக்கு வந்தார்கள். நான் ஏதோ பிரச்சனை என நினைத்துப் பதறினேன். ஆனால், அவர் இந்த விஷயத்தைச் சொன்ன பிறகு என் மனதில் மகிழ்ச்சி பொங்கி எழுந்தது. என் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போட்டிக்கு நான் சென்றவுடன் நான் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். அன்று நான் பெரிய அளவில் உள்ளவர்களைச் சந்தித்தேன். எனக்கு நினைவில் நின்றது இந்த நாள் ஏனெனில் செய்தித்தாளில் என் புகைப்படம் வந்தது.
சு. சினேகா VIII – A