நீருக்கு அடியில் ஒருநாள்

நீருக்கு அடியில் ஒருநாள் இருந்தால் கடலுக்கு அடியிலே தான் இருப்பேன். நான் கடற்கன்னியாக உருமாறி நீருக்குள் செல்வேன். நான் கடலில் வாழும் மீன்களையெல்லாம் படம் பிடிப்பேன்; பாதுகாப்பேன். நான் அங்கு வாழும் மீன்களிடம் சென்று நான் தான் அவர்களின் இளவரசி என்று கூறுவேன். நான் அங்கு வாழும் மீன்களிடையே உற்சாகமூட்ட நிறைய போட்டிகள் நடத்துவேன். எந்த மீன் வெற்றி பெற்றதோ அதை நான் அரண்மனையின் காவலாளியாகவோ, மந்திரியாகவோ இருப்பதற்கு அனுமதி கொடுப்பேன். நான் அங்கு எனக்கு ஒரு நல்ல தோழியைக் கண்டுபிடித்து அவளுடன் நட்புக் கொண்டாடுவேன். நான் என் தோழியையும் என்னுடன் என் கடல் இல்லத்திற்கு அழைத்துச் சென்று விருந்தோம்பல் செய்வேன்.

                                                     சு. பிரதிக்ஷா

                                             எட்டாம் வகுப்பு ஈ பிரிவு

கடலுக்கு அடியில் நான் சென்ற போது ஒரு தங்கமீனைக் கண்டேன். அதைக் கண்ட நான் என் கையில் எடுத்து கடல் நீரில் அதனை நீந்த விட்டேன். அப்போது நீரிலிருந்து ஒரு கடற்கன்னி தோன்றியது. அந்தக் கன்னி என்னிடம் நன்றி தெரிவித்து என்னைக் கடலில் வாழும் ஒருவனாக இருக்க ஆசியளித்தது. நான் கடலுக்குள்ளே சென்று முதலில் பாற்கடலில்  உள்ள பெருமாளை வணங்கிச் “செல்வத்தோடு வாழ்க” என வாழ்த்துப்  பெற்றேன். பிறகு, வண்ணமயமான கடலில் உள்ள அட்லாண்டிஸ் நகரத்தைச் சுற்றி வந்து மீண்டும் நிலத்துக்கு வந்தடைந்தேன். கடலடியில் நீருக்கடியில் நான் இருந்த அந்த நிகழ்வை என்னால் மறக்க இயலாது.

பி. ஆலன்

                                                 எட்டாம் வகுப்பு இ பிரிவு

நான் நீருக்கு அடியில் ஒருநாள் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இப்பொழுது, என் ஆசை நிறைவேறி விட்டது. நான் ஒருநாள் முழுவதும் நீருக்கு அடியில் இருந்தேன். அப்பொழுதுதான் நான் வாழ்க்கையின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டேன். நீருக்குள் இருப்பது கடினம் தான், ஆனால் நாம் நினைத்தால் இருக்க முடியும். நாம் அனைவரும் சாதிக்கப் பிறந்திருக்கிறோம். அதனால் உங்களிடமுள்ள திறமைகளை வீணாக்காமல் பயன்படுத்துங்கள், சாதியுங்கள். நீருக்குள் இருக்கும் சிறிய மீன் தினம் தினம் திமிங்கலத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறது. அதுபோல் நாமும் நம் வாழ்க்கையில் முன்னேறப் (சாதிக்கப்) போராடுவோம்.

                                                          பு.வி. ஸ்வேதா

                                                         எட்டாம் வகுப்பு

நீருக்கு அடியில் ஒரு நாள் இருந்தேன். அப்போது, நான் அங்கு வண்ணவண்ணமாய் இருந்த கோடிக்கணக்கான மீன்கள் மற்றும் செடிகளைப் பார்த்தேன். அதை எல்லாம் பார்த்தவுடன் கடவுள் என்னைப் படைத்ததை நினைத்து மகிழ்ந்தேன்.நான் கண்ட காட்சிகளைப் படம் பிடித்தேன். கண் மூடித் திறப்பதற்குள் அந்நாள் முடிந்தது. இன்றைய நாள் எவ்வளவு இனிமையாக இருந்தது என்று என் கண் மூடி இரசித்தேன்.

                                                     துவாரகேஷ். கா

                                           எட்டாம் வகுப்பு இ பிரிவு

 

 நீருக்கு அடியில் ஒரு நாள் இருந்த போது நான் கண்டது ஓர் இனிய உலகம். ஆம், அங்கு நான் இருந்தபோது இருள் சூழ்ந்திருந்தது; பயங்கரமாகவும் இருந்தது. அக்காலத்தில் ‘முத்தெடுத்தல்’ என்பதனை எவ்வாறு செய்தனர் என நினைத்து வியந்தேன். அந்நாள் எனக்கு அற்புதமான நாளாக அமைந்தது.

பா.ஸ்ரீமதி

                                    எட்டாம் வகுப்பு ‘இ’ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *