காற்றை நேசி
நின்னைத் தாலாட்டும்
வெய்யோனை நேசி
விடியலைத் தந்திடும்
மழையை நேசி
மனதை ஆராதிக்கும்
நெருப்பை நேசி
பகையை மறக்க ஆணையிடும்
விண்ணை நேசி
உயரப் பறக்க அழைக்கும்
பூமியை நேசி
பொறுமையை உணர்த்திடும்
இயற்கையை நேசி
இன்பம் தந்திடும்
மனிதனை நேசி
நேயம் மலர்ந்திடும்
த. செல்வராணி
தமிழாசிரியை
என்.எஸ்.என்.நினைவுப் பள்ளி