நேரம்

கண் போன்ற காலமே!

பொன் போன்ற நேரமே!

உன்னை வீணடித்தால் ஏற்படும் சோகமே!

வெற்றிக்கு நீதான் முக்கியமே!

சாதனையாளர்களை உருவாக்கிய அதிசயமே!

நீ போனால் திரும்பி வருவதில்லை – இதையறிந்தும்

நின்னை வீணடிக்கும் மனம் இப்புவியில் சாதிப்பதில்லை!

வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பாயே!

உன்னைச் சேமித்தால் வெற்றிக்கு வழிவகுப்பாயே!

மரகதமே! மாணிக்கமே! வையகமே! மனிதன்

மதிக்கவேண்டியபொக்கிஷமே!

உன்னைச் சேமிப்பேன் அனுதினமுமே!

அதுவே எந்தன் இலட்சியமே!

K .S.விஜயகணேஷ்

பத்தாம்வகுப்பு ‘ஆ’ பிரிவு

வாழ்வில் முக்கியமானது நேரம்

அது போனால் திரும்பி வருவதில்லை

திரும்பி வரவழைக்க ஒரு மாயமும் இல்லை

உன்னைக் கைப்பிடித்து வாழ்ந்தோர் பலர்

அவர் வாழ்வு இப்போது மலர்

உன்னைச் சேமிப்பேன் இனிதே – ஆகுமே

என் வாழ்வுபுதிதே!

பிரவீண்

பத்தாம்வகுப்பு  ‘ஆ’பிரிவு

மற்றவர்களுக்காகப் பொய்யாக வாழும்

மனிதர்களுக்கு மத்தியில்

எவர் என்ன உரைத்தாலும்

உண்மையாக வாழும் எனதருமை நேரமே!

சிறுத்தை போன்று வேகமாக ஓடிடுவாய்! –உன்னைச்

சரியாகப் பயன்படுத்துவோரின் வாழ்வில் ஒளி வீசிடுவாய்!

ஓய்வெடுக்காமல் சுற்றிடுவாய்!

உன்னைக் கவனிக்காதோரிடம் கடிந்து கொள்வாய்!

மாமனிதர்களைச் செதுக்கிடுவாய்!

உன்னைப்பற்றி எல்லாரையும் பேச வைப்பாய்!

சிலரின் வீட்டில் பெரிதாய் சிலரின் வீட்டில் சிறிதாய்

பலரின் கைகளில் இருக்கிறாய்!

எங்கு எப்படியிருந்தாலும் எல்லாரிடமும்

சமமாக நடந்து கொள்கிறாய்!

நான் உண்ணும் போதும் பார்க்கவைத்தாய்!

உறங்கும் போதும் பார்க்கவைத்தாய்!

உன்னைப்படிக்கும் போதும்பார்க்கவைத்தாய்!

இப்படி உன்னைப் பார்த்துப்பார்த்தே இக்கவிதையை

என்னை எழுதவைத்தாய்!

முவை.நந்தினி

ஒன்பதாம்வகுப்பு  ‘இ’பிரிவு

 

சுற்றும் கடிகார முள்ளில்

ஓடுவது வாழ்க்கை என்று

நினைப்பவன் வாழ்கிறான்.

முள் என்று நினைப்பவனோ வீழ்கிறான்.

தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால் தான்

எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளேன்

என்றே உரைத்திடும் ‘கடிகாரம்’

கற்றுக்கொள்மானிடா!

கடிந்தே செயலாற்றிட

சி.வைஷாலி

ஒன்பதாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு

 

நேரமே! உன்னை நான் என்னவென்று சொல்வது?

நில் என்று சொன்னால் நிற்கமாட்டாய்

பொறு என்று சொன்னாலும் பொறுக்கமாட்டாய்!

ஓடு என்று சொன்னாலும் வேகமாக ஓடமாட்டாய்!

உன்னை நான் எப்படித்தான் வருணிப்பதென்று

தெரியாதிருந்த போது நீ

திசம்பர் மாதம் பூக்கும் பூ போன்றவன்

உனைச் சரியாகப் பயன்படுத்தாவிடில்

எம்மைவிட்டுச் சென்றிடுவாய் என்றே

நானும் தெரிந்து கொண்டேன் நண்பாநானும்!

இ. ஷாலினி

பத்தாம்வகுப்பு‘ ஈ’பிரிவு

நேரமோ கடந்துபோகும்

பூமியோ சூரியனைச் சுழன்று கொண்டிருக்கும்

நேரத்தை நம்மால் நிறுத்த இயலாது – ஆனால்

அதனைச் சரியாகப் பயன்படுத்த இயலும்!

கடிகாரத்தில் ஓடுவது முள்ளல்ல அது

நம் வாழ்க்கையாகும் – நேரமே!

நீ விரைவாகச் சென்றாலும் என்

வாழ்க்கை முழுவதும் உன்னைத்தொடர்கிறேன்.

என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நீயே!

உன்னோடிணைந்து ஓட

நானும் முயற்சிக்கிறேன் வெற்றி பெற!

பார்கவி

பத்தாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *