அம்மாவைத் தாண்டிய
ஓர் உலகினைக் கண்டிட
ஆசை ஆசையாய்ப்
புத்தகம் சுமந்து
இதமாய்த் தோழமையின்
கைப்பற்றி உலாச் சென்று
ஈடில்லா ஆனந்தமடைந்து
மனம் நிறைந்த கனவுகளுடன்
உலகை எதிர் கொள்ள
வழிகள் பல கற்று
ஊக்கம் பல பெற்று
கல்வியில் சிறந்து
எதுகை மோனையில்
கவிதை நடை பேசி
ஏளனம் பல செய்து எள்ளி
நகையாடி சிறிதும்
ஐயம் இன்றி வாழ
ஆசானிடம் கற்று
ஒற்றுமையின் முக்கியத்துவம்
அறிந்து செயல்பட்டு
ஓடி முடித்துத் திரும்பிப்
பார்த்தால் ஏக்கத்துடன்
ஔடதமாய்க் கசப்பின்றி
இனிப்புடன் ஏற்று
அஃதே உண்மை என்றுணர்ந்தேன் – என்
பள்ளிப் பருவம் திரும்ப வாராதோ?
சாரதா
சமூகவியல் ஆசிரியர்
என்.எஸ்.என்.நினைவுப்பள்ளி