மகள்
மகளே!
உனை நான் எவற்றோடு ஒப்பிடுவேன்?
நாள்தோறும் தேயும்
நிலவோடா?
பூக்களோடா?
சோகமும் இழையோடும்
பாடலோடா?
மேகத்துள் மறைந்திடும்
சூரியனோடா?
வெள்ளமாய் மாறிடும்
நீரோடா?
பகலில் தெரியா
தாரகையோடா?
சூறாவளியாய் மாறிடும்
காற்றோடா?
எவற்றோடு ஒப்பிடுவேன் ???
வாழ்க்கையில் அர்த்தமாய்
ஆண்டவனின் அருளாய்
வற்றாத செல்வமாய்
தெவிட்டாத அமுதமாய்
மகிழ்ச்சியின் சின்னமாய்
விளங்கும் நீ…
ஒப்பிடமுடியா….. ஒப்பற்றவள்
ஜி. ரேவதி
சமூக அறிவியல் ஆசிரியை
என்.எஸ்.என். நினைவுப்பள்ளி