மரம் பேசினால்

பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் ஆகிய அனைத்து உயிரினங்கள் வாழ நான் உதவுகிறேன்.ஆனால், நான் உயிர் வாழ நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் என்னைத் தேவைக்கு அதிகமாக வெட்டுகிறீர்கள்.என்னை நீங்கள் ஒழுங்காகப் பராமரிக்காததால் எங்கள் இனம் அழிந்து கொண்டே வருகிறது. அதனால், என்னைக் காப்பாற்ற நான் சில வழிமுறைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்:

  1. என்னை அதிக அளவில் இப்பூமியில் நட்டு வளருங்கள்.
  2. என் மரக்கன்றுகளைச் சுற்றி வேலி இட்டு, நீர் ஊற்றி, இயற்கை உரமிட்டு நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
  3. நான் உங்களுக்குச் செய்யும் நன்மைகளை அனைவரிடமும் கூறுங்கள்.
  4. நீங்கள் என்னை வெட்டிய இடங்களிலெல்லாம் மறுபடியும் மரக்கன்று நடுங்கள்.
  5. நாம் அனைவரும் நீண்ட காலம் உயிர்வாழ, மண் வளத்தைப் பெருக்க, மழை வளம் பெருக, என்னை வளருங்கள் என்று உறுதிமொழி எடுங்கள்.

வை.க.ஸ்ரீ செண்பக சக்தி

                                     ஆறாம் வகுப்பு-‘அ’ பிரிவு

 

மரம் என்னிடம் ஒரு நாள் பேசியது

அதன் துன்பங்களை என்னிடம் கூறியது;

நான் உங்களுக்குத் தூய காற்றைத் தருகிறேன்;

ஆனால் நீங்கள் எனக்கு மாசுபட்ட காற்றையே தருகிறீர்கள்.

அதையும் நான் எடுத்துக் கொள்கிறேன்;

ஆனால் நீங்களோ என்னை வெட்டி எடுத்துக் கொள்கிறீர்கள்

உலகத்தில் நல்லவர் யாரும் இல்லையா?

என்னை வளர்க்க ஒரு அன்னை கூட இல்லையா?

உங்கள் யாருக்கும் மனமே இல்லையா?

என் வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லையா? என்று மரம் கூறிய குரல்

என்னைச் சிந்திக்க வைத்தது.

 

                                                     செ.அபிஷேகப்பிரியன்

ஆறாம் வகுப்பு ஆ’ பிரிவு

 

ஒரு நாள் நானும் என் தோழிகளும் மரத்தடியில் விளையாடிக் கொண்டு இருந்த போது யாரோ அழைப்பது போல் உள்ளதே என மாலா மற்றும் மயில் பயந்து நடுங்கினர். அப்பொழுது அங்கிருந்த மரம்”பயப்படாதீர்கள் நான் உங்கள் நண்பன் தான்”.”என்னை ஏன் உங்கள் இனத்தினர் வெட்டுகிறார்கள்? அவர்கள் வெட்டுவதனால் உங்கள் நகரமும், உலகமும் தான் அழியும்” என்றது. இதைக் கேட்ட நாங்கள் அம்மரத்திடம் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்தல் வேண்டும் எனக் கேட்டோம். அதற்கு மரமானது எங்களை வெட்டாதீர்கள். ஏனெனில், நீங்களும், பிற உயிரினங்களும் வாழ காற்று, மழை, நிழல் தந்து பயன் தருவோம் என்று கூறியது. மரம் பேசியது உண்மைதானே? சிந்திப்போம்; செயல்படுத்துவோம்.

                                                       வி. விபூஷிணி

                                            ஆறாம் வகுப்பு-‘ஆ பிரிவு

 

தானாக வளரும் என்னை- நீ

வீணாக அழிக்காதே!

தானாக வாராது மழை- நீ

என்னைக் காக்கும் வரை

தரணியெங்கும் சிறக்க- நீ

என்னைப் பாதுகாத்திடு!

                                         மு.ஸ்ரீராம் குமார்

ஆறாம் வகுப்பு-‘இ’ பிரிவு

 

அன்றொரு நாள் ஒரு மரம் என்னிடம் பேசியது என்பதை விட  என்னிடம் கதறி அழுதது என்றே கூறலாம். நான் ஏன்? என்று விசாரித்தேன் அது கூறியது இந்தக் காலத்தில் மரங்களை எல்லாம் அழித்து வருகிறார்கள். இப்போதே என்னைப் போன்றிருந்த பலர் இறந்து விட்டனர் .நானும் இனி வாழ முடியாது போலத் தோன்றுகிறது. நான் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் என்னை வெட்டி வீழ்த்தினால் நான் எவ்வாறு உயிர் வாழ முடியும்? என்று மரம் பேசியது என்னைச் சிந்திக்க வைத்தது.அது கூறியது மீண்டும் தொடராமல் இருக்க விரைந்தோடி மரம் வெட்டுபவரைத் தடுத்தேன்.

ந.தேஜஸ்வினி

                                              ஆறாம் வகுப்பு-‘ஆ பிரிவு

 

ஒரு நாள் நான் கடைத்தெருவில் சென்று கொண்டிருந்தேன்.அப்பொழுது, நான் அங்கு ஒரு பெரிய மரத்தைப் பார்த்தேன். நான் மிகவும் களைப்பாக இருந்தேன். அதனால், அந்த மரத்தின் அடியில் ஓய்வெடுக்கலாம் என்று முடிவெடுத்தேன்.அங்கு சென்று உட்கார்ந்தேன்.திடீரென்று அங்கிருந்து ‘ஸ்டெஃபினா இனிய காலை வணக்கம்’ என்ற குரல் கேட்டது.‘யார் பேசுவது? என்று கேட்டேன்.‘பின்னால் திரும்பிப் பார்’ என்று குரல் கேட்டது. பின்னால் திரும்பினால் அங்கிருந்த மரம் பேசியது.அது மிகவும் வருத்தமாக இருந்தது. நான் அதனிடம் ‘ஏன் நீ வருத்தமாக இருக்கிறாய்? என்று கேட்டேன்.அது ‘மனிதர்கள் எல்லோரும் என் நண்பர்களையெல்லாம்   வெட்டி, இல்லாமல் செய்து கொண்டு வருகின்றனர். நீயாவது என்னை வெட்டாமல் என்மேல் அன்பு செலுத்துவாயா?’ என்று கேட்டது. அதன் கேள்வி என்னைச் சட்டென்று மௌனமாக்கி விட்டது. நானும் அதற்கு உதவி செய்யலாம் என்று நினைத்து முடிவெடுத்தேன். அதை அதனிடம் கூறினேன்.மரம் வெட்டாதீர்கள் என்று எல்லோரிடமும் கூற வேண்டும் என எண்ணினேன்.

 அ.ஸ்டெஃபினா

ஆறாம் வகுப்பு ஈ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *