இளமைப்பருவத்துடன் துடிப்புள்ளதும் எதையும் சாதிக்க வல்லது மானது வளரும் மாணவப்பருவமாகும்.இப்பருவமே மானிட வாழ்க்கையில் முக்கியமான பருவமாகக் கருதப்படுகிறது.இப்பருவத்தைச் சீராக அமைத்துக்கொண்டால் எதிர்காலவாழ்வு வளமாகும்.‘விளையும்பயிர்முளையிலேதெரியும்.’‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற கூற்றுகளுக்கு ஏற்ப இப்பருவத்தில் நாம் எதை விதைக்கின்றோமோ அதுவே பின்னாளில் நமக்குக்கதிராய்க் கிடைக்கும். அவை நல்ல குணங்களாக இருந்தாலும் சரி,தீயகுணங்களாக இருந்தாலும் சரி அதற்கேற்ற பலனை நாம்அடைவோம். எனவே, இம்மாணவப் பருவத்திலேயே உயர்கல்வி, நல்லொழுக்கம்,அன்பு,கருணை, பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, சமுதாயத்தொண்டு போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், தானும் உயர்ந்து தன்னைச்சுற்றியுள்ள சமுதாயத்தையும் உயர்த்தி நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும்.இவற்றால் நாம் ஒருவளமான இந்தியாவை உருவாக்கமுடியும்.இதைத்தான், டாக்டர்.அப்துல்கலாம் அவர்கள் வளமான இந்தியா உருவாவது மாணவர்களின் கைகளில் தான் உள்ளது என்பதை நம்பிக்கையோடும் பெருமிதத்தோடும் கூறுகிறார்.‘நமது பிறப்பு ஒருசம்பவமாக இருக்கலாம்.ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.எனவே,மாணவப்பருவமெனும் மாபெரும் சக்தியைக் கொண்டு புதியதொரு சரித்திரம் படைப்போம்.
ஹேமாதேவி
யோகாஆசிரியை