வயதுக்கு மீறிய சாகசங்களினால் ஏற்படும் விளைவுகள்

 

நம் நண்பர்கள் மற்றும் மற்றவர்கள் பாராட்டுவதற்கும் வியப்பதற்கும் வயதுக்கு மீறிய சாகசங்கள் செய்து பலன் இல்லை. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் தாம் தனிப்பெயர் பெறுவதற்குத் தான்.ஆனால், அந்தச் செயல்கள் செய்யும் பொழுது நம் பெற்றோர் நம் மேல் வைத்திருக்கும் அக்கறையையும், அன்பையும் மனதில் ஒரு முறை நினைக்க வேண்டும்.வயதுக்கு மீறிய சாகசங்கள் அதாவது வேகமாக வண்டி ஓட்டுதல், மிதி வண்டியை இரண்டு கைகளையும் விட்டு ஓட்டுதல் போன்றவையாகும்.ஆனால், இவை அனைத்தும் நாம் அனுபவிக்கும் இரண்டு அல்லது மூன்று நிமிட மகிழ்ச்சிக்காகத் தான். அவ்வாறு, செய்ய நினைக்கும் போது பெற்றோர் படும் வேதனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். இச்செயல்கள் செய்வதால் நாம் மட்டும் இல்லாமல் நம்மைச் சுற்றி இருப்போரும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இந்தியாவின் வருங்கால தலைவர்களாகிய நாம் இதனைச் செய்யக் கூடாது என உணர்ந்து மற்ற நண்பர்களுக்கும் புரியவைத்து நலமுடன் வாழ்வோம்.

                                                     பா.சூர்யா

                                            பத்தாம் வகுப்பு-‘இ’ பிரிவு

இளைஞர்கள், மாணவர்கள் இக்காலத்தில் எல்லா விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பல. மாணவர்கள் இப்பொழுது படம் எடுக்கிறோம் என்று தண்டவாளத்தில் தலை வைப்பது, ஓடும் இரயில், பேருந்து போன்றவற்றிலிருந்து குதிப்பது போன்று படம் பிடித்து முகநூல், இணையத்தளத்தில் போட்டு ‘லைக்ஸ்’ வாங்க அவர்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். மேலும், வண்டியை வேகமாக ஓட்டி அதில் முதலில் யார் வருவது என்று போட்டி  நடத்துகிறார்கள். இதனால், விபத்துகள் அதிகம் ஏற்பட்டு அருகில் வரும் நபரும் பாதிக்கப்படுகிறார்.  அல்லது நிறைய மாணவர்கள் விபத்துக்குள்ளாகி அவர்களது உடல்  உறுப்புகளை  அல்லது உயிரையும் இழக்கிறார்கள். இதனால், அவர்களுடைய வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியாகி விடுகிறது.மேலும், இதனால், அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள்.  சில பேர் கால், கைகளை இழந்து சரி செய்தாலும் அறுவை சிகிச்சைக்குப் பின் அவன் மட்டுமல்லாமல் அவனுடன் சேர்ந்து அவனுடைய குடும்பத்தாரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். அவன் சாப்பிடுவதற்கு, கழிப்பறை செல்வதற்கு, குளிப்பதற்கு மற்றும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவன் யாராவது ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய

விளைவுகளைத் தரும் இச்சாகசங்கள் நமக்குத்  தேவையா? சிந்தியுங்கள்.

மு. ஹர்சினி

                                            பத்தாம் வகுப்பு-‘இ’ பிரிவு

மாணவர்கள், தற்போதைய தொழில்நுட்பக் காலத்தில்,அறிவை வளர்க்காமால்,  வயதுக்கு மீறிய செயல்களால் பலர்  உயிரை இழந்துள்ளனர். தம்மை, அனைத்து வகையிலும் உயர்ந்தவனாக காண்பிக்க, இளைஞர்கள் மாணவர்கள் வயதுக்கு மீறிய சாகசங்களைச் செய்கின்றனர். வண்டியின் முன்சக்கரத்தைத் தூக்கி ஓட்டுதல், ஆபத்தான இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பது எனப் பல செய்து உயிரையும் இழக்கின்றனர். எனவே, வயதுக்கு மீறிய சாகசங்கள் வாழ்க்கைக்குக் கேடு விளைப்பதுடன் உயிரையும் கொல்லும் என்பதை உணர்ந்து இவ்வாறான சாகசங்களை மாணவர்களும், இளைஞர்களும் கை விடுதல் வேண்டும்.

                                                       இரா.சித்தார்த்

                                           பத்தாம் வகுப்பு-‘இ’ பிரிவு

மனிதன் வரலாற்றில் இடம் பெற நினைப்பது தவறில்லை. ஆனால் அதற்காக உயிரைப் பறிக்கும் சாகசங்கள் செய்தல் கூடாது .சாகசங்கள் பல உள்ளன.அதில் சில வயதிற்கு உட்பட்ட சாகசங்கள் என்று உள்ளன.. இச்சாகசங்களை  முறையான பயிற்சி எடுத்த பின்னர் தான் செய்ய வேண்டும். மிதிவண்டி சாகசம், இருசக்கர வாகன சாகசம், உயர்ந்த இடத்தில் இருந்து குதிப்பது, வாயில் நெருப்பை அனுப்புவது என்று பல உள்ளன. இதற்கு பயிற்சியாளரிடம் முறையான பயிற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் அது நம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆனால் இதை உணராதோர் இதற்கு அடிமையாகி இறப்பைக் கூடச் சந்திக்க நேர்கிறது. இவ்வாறு செய்வது பெருமை என்று நினைத்து தன்னையே அழித்துக் கொள்ளாமல், இதனால் விளையும் விளைவுகளை எடுத்துரைப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எனவே,

உயிர்ச் சேதங்களைத் தடுப்போம்”

”வயதுக்கு மீறிய சாகசங்களை நிறுத்துவோம்

                           பா. ஹேமலதா

பத்தாம் வகுப்பு-‘இ’ பிரிவு

இளைஞர்கள்  இன்றைய காலகட்டத்தில்  மகிழ்ச்சிக்காகவும் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தங்களுடைய வயதுக்கு மீறிய சாகசங்களில் ஈடுபடுவது ஒரு வழக்கமாகிவிட்டது.வயதுக்கு மீறிய சாகசங்களைச் செய்து உயிரை இழந்தோரின் எண்ணிக்கை தற்போது மிக அதிகமான அளவில் உள்ளது. இதில் கிடைக்கும் சந்தோஷம் சிறிய கால அளவு தான். வீர தீரச்செயல்  புரிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போடுவதால் நிறைய பேர் பாராட்டுவார்கள், உற்சாகப் படுத்துவார்கள். ஆனால் அது சிறிது காலத்திற்கு தான் பின்பு அதைப் பற்றிப் பேசமாட்டார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் உங்களின் புகைப்படத்தைப் பாராட்டியவர்கள் வந்து உதவ முன் வரமாட்டார்கள். உங்களுடன் இருப்பது உங்கள் பெற்றோர் மட்டுமே. எனவே, வயதுக்கு மீறிய சாகசங்களைச் செய்து உயிரை இழக்காமல் இறைவன் உங்களுக்குப் பரிசாகத் தந்த உயிரை எந்த அளவுக்குப் பாதுகாக்க முடியுமோ பாதுகாத்துப் பிறரை மகிழ்வித்து வாழுங்கள்.

                                                        ஹ. சாய் வர்ஷா

                                                 பத்தாம் வகுப்பு-‘ஆ’ பிரிவு

இளைஞர்கள் வயதுக்கு  மீறிய சாகசங்களால்  வாழ்க்கை முறை பாதிப்படைகின்றன. இக்காலத்தில் 12 – 18 வயதில் உள்ளவர்கள் நிறைய விபத்துகளுக்கு ஆளாகிறார்கள். மாணவர்கள் அற்புதமான செல்பிகளை எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் இரயில் தண்டவாளத்தில் நின்று அல்லது படுத்துக் கொண்டு செல்பி எடுப்பதால் இரயில் வண்டி வருவது கூட தெரியாமல் விபத்துக்குள்ளாகிறார்கள்.

சிலர் மிதிவண்டிப் பந்தயம் செய்கிறார்கள்.பொதுமக்கள் செல்லும் வழியில் இப்படிப்பட்ட பந்தயங்களை நடத்தி பொதுமக்களை அச்சப்படுத்துகிறார்கள். இதனால் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். மிதிவண்டி பந்தயத்தில் அதிவேகமாக வண்டிகளை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பந்தயத்தில் செல்வோர் பந்தயம் செய்து வெற்றி பெறுவார்களா மாட்டார்களா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உள்ளது. அதனால் பலரும் பணத்தை இழக்கிறார்கள்.

இதேபோல் குதிரையின் மீது பந்தயம் வைக்கிறார்கள்  இதிலும் தம் பணத்தை பந்தயத்தில் கட்டி எந்த குதிரை வெற்றி பெறுகிறதோ அந்த குதிரையை பந்தயம் செய்தவர்கள் வெற்றி பெறுவார்கள். இதில் தோல்வியடைந்தவர்கள் மேலும் மேலும் தம் பணத்தை செலவு செய்து பல தோல்வியை தொடர்ந்து சந்திப்பதால் மனச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். எனவே வயதுக்கு மீறிய சாகசங்கள் விபத்துகளையும் மன உளைச்சலால் தற்கொலை செய்வதற்கும் உடந்தையாக இருக்கிறது. எனவே மாணவர்கள் சாகச பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

                                                          சௌந்தர்யா

                                                 பத்தாம் வகுப்பு-‘இ’ பிரிவு

“மல்யுத்தம்” போன்ற சாகசங்கள் வயதுக்கு மீறியன.இதில், பலர் தன் உயிரை அர்ப்பணித்துள்ளனர்.இதை விதிகளுக்கு மீறிச் செயல்பட்டதனால், பல இளைஞர்கள் உயிரை இழந்துவிட்டனர்.இது போன்ற வீர விளையாட்டுகளை ஒழிக்க பல நாட்டினர் முயன்றும் எப்பயனும் இல்லை. ஏனென்றால் இது ஒலிம்பிக்கில் விளையாடப்படும் விளையாட்டு ஆகும். இது போன்ற விளையாட்டுகளை பல இளைஞர்களே பங்கேற்பதனால் பலர் இதைத் தவறாகப் பயன்படுத்தி பல விளைவுகளில் சிக்கித் தவிப்பதுண்டு. இது போன்ற விளையாட்டுகளில் கைகள் அல்லது கால்கள் முறிவதுண்டு. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் பலர்.இந்த விளையாட்டில் தன் வயதுக்கு மேற்பட்டோருடன் விளையாடுவதனால் பலர் தன் வாழ்க்கையை பாதியிலேயே இழக்கிறார்கள்.

“பைக்ரேசிங்” என்பதும் சாகசங்களில் ஒன்று. இதில் பிரம்மாண்ட முறையில் பரிசுகளும் உண்டு.இதனால் உயிரிழந்தோர் பலர்.

“பையர் கோஸ்ட்” என்பது வாயினால் நெருப்புப் பொறிகளை வெளியிடும் விளையாட்டு.இதைச் செய்வதற்கு மது அருந்த வேண்டும் .எனவே இது மிகவும் ஆபத்தான விளையாட்டு.

                                                    க.ம.லீனா மாறன்

                                                 பத்தாம் வகுப்பு-‘இ’ பிரிவு

 

இன்றைய சமுதாயத்தில், சிறுசிறு குழந்தைகள் செய்ய வேண்டியது என்ன?செய்யக்கூடாதது என்ன என்று சில பெற்றோர்கள் கற்பித்து வளர்க்காததால் குழந்தைகள் பல விளைவுகளைச் சந்திக்கின்றனர்.$ அவ்வாறு ஏற்படும் இரு சம்பவங்களை பற்றி கூறுகிறேன்.

1.18 வயது தாண்டாதவர்கள் வாகனம் ஓட்டுதல்:

இதனால் பல சாலை விபத்துகள் ஏற்பட்டு அவர்களின் பெற்றோர்க்குப் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. விபத்து நடந்த பிறகு தான் சில பெற்றோருக்கு தன் குழந்தைகள் வாகனம் ஓட்டுவது தெரிய வருகிறது.சிறு வயதிலேயே உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.

  1. முகநூல், வாட்ஸ்அப் ஆகியவற்றில் குழந்தைகள்:

முகநூலில் படங்கள் போடாதே என்று பெற்றோர் கூறினால், அதில் ‘ஸ்டேட்டஸ்’ போடுவது தான் “ட்ரெண்டு” என்று குழந்தைகள் கூறி, அத்துமீறி நடந்து கொள்வதால் ‘சைபர்க்ரைமில்’ சிக்கிக் கொள்கின்றனர்.

இவையெல்லாம் சாகசம் என நினைத்துக் கொண்டு வாழும் இன்றைய குழந்தைகள் செய்வதைத் தடுக்க வேண்டும்.

                                                        ஜா.சுப்ரஜா

                                                பத்தாம் வகுப்பு-‘இ’ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *