முற்காலத்தில் மக்களுக்கு வரட்டுக் கௌரவம் இல்லை. தன் வீட்டில் யாராவது ஏதேனும் ஒரு தவறு செய்தாலும் கூட அத்தவறைத் தான் செய்ததாக ஒப்புக் கொள்வர். ஆனால், இக்காலத்தில் உள்ள சிறுவர் சிறுமியிலிருந்து அனைவருக்கும் வரட்டுக் கௌரவம் அதிகமாக உள்ளது. ஏதேனும் தவறைத் தாம் செய்தாலும் கூட அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் குழந்தைகள் மிகச் சிலராகவே இருக்கின்றனர். பெரியவருக்கு மரியாதை தர வேண்டும். வரட்டுக் கௌரவத்தினால் பலரின் வாழ்க்கை சீரழியும். எனவே நம் வாழ்வில் வரட்டுக் கௌரவமின்றி வாழ்வோம். வரட்டுக் கௌரவம் நம்மையும் கெடுக்கும். நமது தலைமுறையையும் கெடுக்கும். வரட்டுக் கௌரவமின்றிப் பிறருடன் அன்பு செலுத்தி, விட்டுக் கொடுத்து வாழ்வோம்.
பா.ஹரிணி
ஒன்பதாம் வகுப்பு-‘ஆ’ பிரிவு
பெரியவர் முதல் சிறியவர் வரை இன்று தாம் தான் உயர்ந்தவர் மற்றவரெல்லாம் தாழ்ந்தவர் என்ற ஒரு பண்பை வளர்த்துக் கொண்டு பிழையைச் சுட்டிக் காட்டினால் அதைத் திருத்திக் கொள்ளாமல் வரட்டுக் கௌரவம் பார்ப்பதால் அவருக்கும் மற்றவருக்கும் இடையே நல்லுறவு நிலவாது. இதை நாம் சிறிய வயதிலேயே சரி செய்யவில்லை என்றால் நாம் நம் எதிர்காலத்தில் முன்னுக்கு வர இயலாது. இது அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்போது இது பெரியதாகத் தெரியாது. ஆனால், நாம் பிறரிடம் வாங்கும் பெயர்களின் மூலம் தான் தெரியும் மற்றவரை எவ்வளவு புண்படுத்துகிறோம் என்று பண்பு அடுத்தவரை எந்த அளவிற்கு வருந்தச் செய்யும் என்பதைச் சொல்ல இயலாது. ஆனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஒரு ஏழையின் முன் நம் கௌரவத்தைக் காட்டுவதன் மூலம் நாம் அவர்களை மீண்டும் மீண்டும் கீழே செல்ல வைக்கிறோம். எனவே இதைப் படித்த பின்பாவது நாம் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வரட்டுக் கௌரவத்தை விட்டு விட்டு ஒழுங்கான மனிதனாக உருவெடுப்போம்.
அஷ்வதா
ஒன்பதாம் வகுப்பு‘ஆ’ பிரிவு
வரட்டுக் கௌவரவம், வருங்காலத் தலைமுறைக்கு மிகவும் ஆபத்தானது. வருங்காலத் தலைமுறை வரட்டுக் கௌரவத்திற்கு ஆட்பட்டு விட்டால் அதிலிருந்து மீள முடியாது. வரட்டுக் கௌரவம் என்றால் என்ன ? ஒருவன் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு தான் செய்த தவறை சரியென்று நிரூபிக்கப் பார்ப்பது. வரட்டுக் கௌரவத்திலிருந்து மீள ஒருவன் தன் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். அவனுக்கு வீண் கோபம் கூடாது. கோபத்தினால் தான் தன் கௌரவம் கெடாமல் இருக்க எண்ணுகிறார்கள். இதனால் தான் வருங்காலத் தலைமுறையினர் அனைவரும் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள்.
அவர்கள் தான் செய்வது தவறு என்பதை ஒரு முறை உணர்ந்தால் தான் அதைச் சரி செய்ய நினைப்பர். ஆனால் இன்று அது தலைகீழாய் உள்ளது. அவர்கள் சிந்தனை செய்யாமல் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி விடுகிறார்கள். முக்கியமாகச் சில குழந்தைகள் தான் செய்த தவறு சரி என்பதற்காகக் கோபப்படுகிறார்கள். அது தான் அவர்கள் செய்யும் தவறு. வரட்டுக் கௌரவம் வராமல் இருக்க வேண்டியது பணிவு. பணிவாக இருக்க நாம் தியானம், யோகா செய்ய வேண்டும். உங்களது கோபத்தைக் குறையுங்கள் இளைஞர்களே!
உங்கள் வாழ்வை ஒளிமயமாக்குங்கள்.
வளமான வாழ்வு வாழ்வோம்.
க.ஸ்ரீ.ஹரி
ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு