
வரலாற்றில் இருவகையாக இடம் பெறலாம். ஒன்று ஹிட்லரை போல தீய வகையில் இடம் பெறுவது, இன்னொன்று காந்தியைப் போல நல்ல வகையில் இடம் பெறுவது. நான் நல்ல வகையில் இடம் பெற விரும்புகிறேன். நமது நாட்டில் சரியான அரசாட்சியே இல்லை. எனவே நானே ஒரு நல்ல பிரதம மந்திரியாகி என் ஆசைகள் பின்வருமாறு அமையப் பாடுபடுவேன். நான் எல்லோரையும் நன்கு பார்த்துக் கொள்வேன். நம் நாட்டில் ஏழை எளிய மக்கள் எவரும் இருக்கமாட்டார். அனைவருக்கும் கல்வி தந்து அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்குவேன். நெறி பிறழ்ந்த செயல்கள் எவையும் நிகழாது பார்த்து கொள்வேன். ஏழை மாணவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, படிப்பு முடியும் வரை எல்லாம் இலவசம் என அறிவிப்பேன். காமராசரின் காலம் போல் என் காலமும் அமையும் இவ்வாறே வரலாற்றில் எனது பெயர் இடம் பெறும்.
நா. ஷோபா IX–C
வரலாற்றில் என் பெயர் இடம் பெற நான் இந்த உலகத்துக்கு தேவையான பல உதவிகளைச் செய்வேன். நான் நன்றாகப் படித்து கடினமாக உழைத்து என் இலட்சியமான அறிவியல் ஆய்வாளராக உருவாவேன். அந்தக் துறையில் நான் சிறந்து விளங்குவேன். பிறகு என் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். விவசாயிகளுக்கு உதவும்படி பல விவசாயக் கருவிகளை உருவாக்குவேன். நான் மகாத்மா காந்தியின் அகிம்சா வழியைப் பின்பற்றுவேன். நம் நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை ஒழிப்பேன்.
முகமது அர்ஷத் IX–C