என் வழிகாட்டி

அன்னை தெரசா

என் வழிகாட்டி அன்னை தெரசா. என்னை மிகவும் கவர்ந்தவர் அவர். ஏனென்றால், ஒரு மனிதனுக்கு தேவை உணவு, ஆடை, தங்க இடம் ஆகியவை ஆகும். நோயுற்ற மனிதனுக்கு உதவி செய்thersa1வது ஆகியவற்றை உணர்ந்த அன்னை தெரசா நோயும் வறுமையும் உற்று வாழ்பவருக்கு உதவி செய்தார். இவரைப் போல நானும் இருக்க விரும்புகிறேன். அவரது பிரபலமான வரிகள் “உன் கண் முன்னால் உள்ளவரை நேசிக்கவில்லை என்றால் காணாத கடவுளிடம் எப்படி அன்பு கூர்வாய்” என்ற வரியே ஆகும், அவரைப் பார்த்து நான் நிறைய காரியங்களைக் கற்க ஆசைப்படுகின்றேன். ஏழை மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை என்னுள் வளர்க்க ஆசைப்படுகிறேன். என் வழிகாட்டியாக அன்னை தெரசாவைக் கொண்டு மேலும் புகழ் சேர்க்க வேண்டும்.

செ. ஷெர்லின் VIII – C

பில் கேட்ஸ்

எனது வழிகாட்டி பில் கேட்ஸ். உலகெங்கும் பேசப்படும் மைக்ரோ சாஃப்டின்  இயக்குநர். வாழ்வில் தன் உயிரையே மைக்ரோசாஃப்டின் வளர்ச்சிக்காகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று நிரூபித்துள்ளார். அம்முயற்சியின் வெற்றியே உலக பணக்காரர்களுள் முதலிடம் பெறச் bill2செய்தது. தன்னிடம் இருக்கும் பணத்தை தனக்கு மட்டும் செலவிடாமல் ஏழை குழந்தைகளுக்கும், அனாதை இல்லம் எனப் பல தொண்டு நிறுவனங்களுக்கும் கொடுத்து தொண்டுகள் செய்துள்ளார். எவ்வளவு பணம் இருந்தாலும் எளிமையாக வாழ்கிறார். கணினியைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ், ஆனால் கணினியின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் பில் கேட்ஸ் ஆவார். பல நற்குணங்களைக் கொண்ட ‘பில்கேட்ஸ்’ எனது வழிகாட்டி ஆவார்.

ஆ. சாதனா VIII – C   ழிகாட்டி

என் வழிகாட்டி

தாயே எந்தன் வழிகாட்டி

தாயே எந்தன் வழிகாட்டிmatah1

எனக்கு மிகவும் பிடித்தவள்

என்னைப் பெற்றெடுத்தவள்

என்னை நல்லவழியில் நடத்துபவள்!

அப்பாவும் எந்தன், வழிகாட்டி

எனக்கு மிகவும் பிடித்தவர்

என்னைத் தீங்கிலிருந்து காப்பவர்

என்னிடம் அன்பாய் இருப்பவர்!

குருவும் எந்தன் வழிகாட்டி;

எனக்கு மிகவும் பிடித்தவர்கள்;

எனக்கு பலவிஷயம் சொல்லித்தருபவர்கள்;

என்னை நல்ல மனிதன் ஆக்குபவர்கள்

நண்பர்களும் எந்தன் வழிகாட்டி;

எனக்கு மிகவும் பிடித்தவர்கள்;

எனக்கு புதுவிஷயம் சொல்லித்தருபவர்கள்;

என்னோடு மகிழ்ச்சியாய் விளையாடுபவர்கள்!

க.ஸ்ரீஹரி VIII – C

என்னுடைய வழிகாட்டி என் அன்னை. முதலில் மாதா, பிறகு தான் பிதா, குரு, தெய்வம். ஏனெனில் அன்னை தான் சகல வேலைகளையும் செய்து எங்களையும் கவனித்துக் கொள்கிறார். தன்னுடைய வாரிசுகளான எங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கிறார். நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கிறார். எனவே என்னுடைய அன்னை தான் உயர்ந்தவர். அவர் தான் என் வழிகாட்டி ஆவார்.

நா. நாச்சாள் VIII – B

 

என் தாய்

நான் இவ்வுலகில் பிறந்திடக்

காரணமாயிருந்தவள் என் தாய்

நான் வாடிய காலங்களில்

என்னை மகிழ வைத்தவள் என் தாய்mother2

நான் துன்பப்படும் பொழுது

என்னுடன் துணை இருப்பவள் என் தாய்

நான் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது

என்னுடன் இருந்து அதைப் பகிர்ந்து கொள்பவள் என் தாய்

என் சிறு வயது முதல் பாசத்தை

ஊட்டி வளர்த்தவள் என் தாய்

இவ்வுலகை நான் புரிந்து கொள்ள உதவுபவள் என் தாய்

இப்படிப் பல உதவிகள் செய்த என் அழகு தேவதையாம்

என் அன்னையே என் வழிகாட்டி

G.S. திவ்யா   VIII – D

 என் பாட்டி

ஒருவன் தனது வாழ்க்கையிலும் செயல்களிலும் வெற்றி பெற, அவனை வழிநடத்துவதற்காகவும், நல்வழிப்படுத்துவதற்கும் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அgrandma1வ்வகையில் நான் என் வாழ்வில் வெற்றி பெற தேர்ந்தெடுத்த வழிகாட்டி என் பாட்டி. அவர், ஒரு வழிகாட்டியாக இருப்பதற்கான எல்லாத தகுதிகளையும் பெற்றவர் என் சிறுவயதிலிருந்தே என் தோழியாகவும், என் குருவாகவும், என் தாயாகவும், தந்தையாகவும் இருந்தவர் அவரை, நான் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அவர் செயல்களில் காட்டும் தெளிவு, சுத்தம், அமைதி, பேசும்விதம் மற்றும் தாய்மையுள்ளம். உண்மையில் சொல்லப் போனால் நான் என் பெற்றோர்களைவிட வாழ்வில் நேசித்தவர் என் பாட்டி ஆவார். இன்றும் என்றும் நான் என் வாழ்வில் மறவாத ஒருவர் என் பாட்டி. சொல்லால் வர்ணிக்க முடியாத ‘ஒப்பற்றவர்’ என் பாட்டி

R.A. ஷ்ரேயா VIII – B

 

என் வாழ்வை மலரவைத்து அவ்வாழ்வை எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுரைத்து, என் வாழ்வில் நேர் வழியைக் காட்டியது என் தாய், தந்தை.

“எண்ணம் நம்மை வடிவமைக்கும்fam1

எண்ணம் நம்மை மேம்படுத்தும்

எண்ணம் நம் வயப்பட்டால்

எதிலும் வெற்றி நமதாகும்.”

என் வழிகாட்டி என் தாய், தந்தை என்று அறிவுரைத்து.

சாதாரண வாழ்வை நல்வாழ்வாய் மலரச்செய்தனர் என் தாய், தந்தை

“உழைப்பின் திருஉருவமே

என் தாய், தந்தை

ஊக்கத்தின் பரம் பொருளே

என் தாய், தந்தை”

ஆழ்கடலுக்கு துடுப்பு போல்…

எங்களுக்கு நீயே வெற்றித் துடுப்பாக அமைந்து அலையாகிய அல்லல்களை தன்னம்பிக்கையோடு மீட்டுத்தோள் தட்டி உயர்ந்த உத்தமரே! உமை நினைத்து வாழ்கையில் வெற்றி நடை போட நானும் வாழ்க்கை எனும் ஏணிப்படியில் ஏறுகிறேன் சறுக்காமல்…

S.சந்தோஷ்குமார் VIII – A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *