உன் எதிர்காலக் கனவு

உன் எதிர்காலக் கனவு

robo1என் எதிர்காலக்கனவு என்னவென்றால் நான் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கும் அறிஞராக ஆக ஆசைப்படுகிறேன். நான் அப்படி ஆகிவிட்டால் நான் பல்வேறு விதமான இயந்திர மனிதனை உருவாக்குவேன். எனக்கு மக்களைக் காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்தால் இந்த இயந்திர மனிதனின் உதவியால் காப்பாற்றுவேன் மேலும், நீரில் நீந்தும் ரோபோக்கள், பறக்கும் ரோபோக்கள் மற்றும் தானாகவே வேலை செய்யும் ரோபோக்கள் என் பல உருவாக்குவேன்.

பி. ஆலன் ஜோன்ஸ் VI C

dhoniஎன் எதிர்கால கனவு என்றால் மட்டைப்பந்து வீரனாவது தான். அதற்காக நான் நிறைய முயற்சி எடுப்பேன். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு என் உடலை நோய் நொடி வராமல் பாதுகாப்பேன். பிரபலமான வீரர்களான விராத் கோலி, ரய்னா, டோனி, ஜாம்பா ஆகிய வீரர்கள் போல் உருவாக நான் முயற்சி செய்வேன். நான் எல்லோருக்கும் தெரிந்த மட்டைப்பந்து வீரராக வலம் வருவேன்.

தி.ஸ்ரீராம்   VI – C

bala1ஒரு பட இயக்குநர் ஆவதே என்னுடைய எதிர்காலக் கனவு என்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காக நான் நிறைய புத்தகங்களைப் படித்து என் அறிவை வளர்த்து வருகிறேன். நிறைய படங்களை இயக்கும். கனவு என் சிறிய வயதிலிருந்தே உள்ளது. நான் சிறிய வயதில் ஒரு கதையைப் புத்தகமாக எழுதினேன். இது போல நிறைய படங்களை இயக்குவதற்காக நிறைய புத்தகங்களைப் படித்து கடின வேலைகளைச் செய்து, நான் ஒரு இயக்குநர் ஆவேன். இதுவே என் எதிர்காலக் கனவு இதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

தர்ஷன் VI–C

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *