
என் மனம் கவர்ந்த தலைவர்
என் மனம்கவர்ந்த தலைவர் “சுப்பிரமணிய பாரதியார்” அவருடைய வீரமான பேச்சை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அமைதி காத்த காந்தியை விட, வீரமாகப் பேசி அனைவரையும் கவர்ந்த பாரதியை மிகவும் பிடிக்கும். அவருடைய கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அவரைப் பார்த்தாலே கம்பீரமாக இருக்கும். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக வீரமாகப் போராடினார். அவரின் போராட்ட குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரதிக்கு நிகர் பாரதியே ஆனால் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே அவர் 1921ல் இயற்கை எய்தினார்.
ர. அப்சரா VI–D
என் மனம் கவர்ந்த தலைவர் டாக்டர் அப்துல் கலாம். டாக்டர் அப்துல் கலாமின் இயற்பெயர் டாக்டர். அவுல் பக்கீர் அப்துல் கலாம். இவர் இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்தார். நம் இந்திய இளைஞர்களுக்கு இவர் கூறும் அறிவுரை “கனவு, கனவு, கனவு; இதனைச் சிந்தனை வடிவமாக்குங்கள், பின் செயலாற்றிட முனைப்படுங்கள்” என்பதாகும். இவர் இந்தியாவின் மீது கொண்ட நம்பிக்கை தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த செயலாகும். இவர், மனிதர்களை என்றுமே சாதி மத வேறுபாட்டோடு பார்த்ததில்லை. இவர் பெரிய அளவில் எல்லோராலும் போற்றப்படுகிறார். இதற்குக் காரணம் இவர் குழந்தைகளின் மீது கொண்ட அன்பு தான். இந்தியா வளர்ந்த நாடுகள் போல் ஆக வேண்டுமெனில் எல்லாத் துறைகளிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றார். இவர் ஜூலை 27 ஆம் தேதி அன்று இறந்தார். ஆனால் இவர் வாழ்ந்த வருடத்திற்குள் இந்தியாவிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். அவர் இறந்த பின்பும் அவருடைய கண், இதயம், ஆகியவற்றைப் பிறர்க்கு தானம் செய்தார். இவர் பல நன்மைகள் செய்துள்ளார். ஆகவே, இவர்தான் என் மனதைக் கவர்ந்த தலைவர் ஆவார்.
ஆர்.ஜி.அக்ஷ்யா VI–C