நீ ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தால்…

நீ ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தால்

killஎனது நாட்டை சொர்க்க பூமியாக மாற்றுவேன். சீரும் சிறப்புமாக ஆட்சி செய்வேன் அனைவரையும் மிக மகிழ்ச்சியுடன் வாழ வைப்பேன். அனைவருக்கும் தரமான கல்வியை அளித்து பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வேன். இல்லை என்று வருபவருக்கு இல்லை என்று சொல்லமாட்டேன். மரங்களைத் தேவையின்றி வெட்டுவதும் விலங்குகளை அநியாயமாகக் கொல்வதும் பெரிய குற்றமாகக் கருதி மிகக் கடுமையான தண்டனை விதிப்பேன். அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியானதாக இருக்குமாறு இயற்றுவேன் நெல், அரிசி மற்றும் பருப்புகள் அனைத்தையும் யார் உற்பத்தி செய்தாலும் அதன் விலையை மக்கள் வாங்குவதற்கு ஏற்ப நிர்ணயிப்பேன்

கணேஷ் VII–B

edu1நான் ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் என் மக்களைப் பாதுகாக்க என் நாட்டின் எல்லைகளைப் படைவீரர்களின் உதவியோடு பாதுகாப்பேன். மக்களின் துன்பங்களைப் போக்குவேன். என் நாட்டில் திருட்டு நடக்காமல் இருக்க ஒற்றர்களை நாற்புறமும் அனுப்புவேன். என் நாட்டில் குழந்தைத் தொழிலாளிகள் இருந்தால் நிதி உதவி செய்து அவர்களைப் படிக்க வைக்க ஏற்பாடு செய்வேன்.

மு. செ. ஆதித்தியா VII – B

formerஎனக்கு ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் முதலில் மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவேன். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். விவசாயம் மேம்படச் செய்வேன். மது மற்றும் புகையிலைப் பயன்பாட்டை ஒழிப்பேன். இயற்கை உரங்களை விவசாயத்தில் உபயோகிக்க வைப்பேன். மற்ற மாநிலங்களோடு என்றென்றும் நட்பு பாராட்டுவேன்.

க. ஸ்ரீபூமிஜா VII – B

former2எனக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் நான் என் நாட்டு மக்களை பேணிக் காப்பேன். அவர்களுக்கு எவ்வகையிலும் அநீதி இழைக்க மாட்டேன். நான் எவரிடமும் பாரபட்சம் பார்க்கமாட்டேன். நான் உழவுத் தொழிலை மேம்படுத்துவேன். நான் ஏற்றுமதி இறக்குமதியை அதிகப் படுத்துவேன். நான் வரி விதிக்கமாட்டேன். என் மக்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டித்தருவேன். பல பள்ளி, கல்லூரிகளைக் கட்டுவேன். நான் என்னிடம் வரும் மக்களுக்குத் தங்கம், வெள்ளி ஆகியவற்றைத் தருவேன். நல்ல குடிநீரை என் மக்களுக்கு வழங்குவேன்.

K.R. ரோஷன் VII – A

former2நான் ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் தண்ணீருக்கும் உணவுக்கும் பஞ்சமே வராதவாறு பார்த்துக்கொள்வேன். என் ஆட்சியில் விவசாயம் செழிப்பாக நடக்கும். என் நாட்டு மக்களை நெகிழியை உபயோகிக்க அனுமதிக்க மாட்டேன். நிறைய ஏரிகள், குளங்கள், ஆறுகளை முறையாகத் தூர்வாரி மழை நீர் சேமிப்பிற்கு வழிவகுப்பேன் என் தேசத்தை முன்னேறிய தேசம் ஆக்குவேன். அதைப் பேணிக்காப்பது என்னுடைய கடமை ஆகும். அதற்காக என் தேசத்தை வளமுறச் செய்து எங்கு பாரத்தாலும் பசுமையாக இருக்குமாறு  மரங்கள் அதிகம் வளப்பேன். நம்முடைய பகை நாட்டவர்களை  நட்பு நாடாக்கிக் கொள்வேன். உழவர்களுக்கும் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும் மரியாதை தருவேன். என் தேசத்தைப் பின்தங்கவிடமாட்டேன். இந்திய குடிமகளாகிய நான் இந்தியர்களை என் நெஞ்சில் சுமப்பேன்.

ம. காயத்ரி VII – A

former3நான் ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிக்க ஏற்பாடு செய்வேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்குவேன். விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர அவர்கள் விளைவித்துத் தரும் பொருள்களுக்கு சரியான விலையினை நிர்ணயிப்பேன். குழந்தைகளுக்கு விளையாட்டுத்திடல் கட்டுவேன். நான் என் நாட்டை நன்றாகப் பாதுகாப்பேன். கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பண்டிகை நாளன்று ஆடைகளை இலவசமாகக் கொடுப்பேன்.

சு. ஜனனி VII–A

emp1நான் ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் இலவசங்களைத் தவிர்த்து எல்லாப் பொருட்களையும் நியாய விலையில் கிடைக்க முயற்சிப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்குவேன் மற்றும் பெண் கல்வித் திட்டத்தை மேம்படுத்த முயற்சிப்பேன். நான் ஆட்சி செய்யும் இடத்தில் குடிநீர் வாரியம், மின்சார வாரியம் பொதுப் பணித் துறை ஆகியன சரியாகச் செயல்படுகிறதா என்று பார்த்துக் கொள்வேன். 18வயதிற்கு மேல் உள்ள அனைவரையும் நிச்சயமாக வாக்களிக்கச் சொல்வேன். அங்கு இருக்கும் முதியோர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறதா என்றும் பார்த்துக்கொள்வேன்.

பா. ஸ்ரீமதி VII – B

ashramநான் ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் நான் மக்களுக்கு வேண்டியதைச் செய்வேன். முக்கியமாக மழைக்காலங்களில் வெள்ளம் வராதபடி செய்வேன். மளிகைப் பொருட்களின் விலைவாசியைக் குறைப்பேன். மக்கள் நலனுக்கு நிறைய சட்டங்களை உருவாக்குவேன். நான் சிறு குழந்தைகளுக்கான மருத்துவச் செலவை இல்லாமல் செய்வேன். ஏழை எளியவர்களுக்கு ஆசிரமத்தைக் கட்டிக் கொடுப்பேன். அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர் ஐந்து மொழிகள் கற்க ஏற்பாடு செய்வேன்.

காவியா ஸ்ரீ VII–B

எனக்கு ஆட்சி செய்யும வாய்ப்பு educat1கிடைத்தால் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன், வறுமையில் வாழும் மக்களுக்கு உணவகம் கட்டுவேன், என் நாட்டில் நிறைய மரம் வளர்த்து மழை பெருக வைப்பேன். கோவில்களுக்கு வரும் மக்களுக்கு அன்னதானம் கொடுக்க நிதி தருவேன், நிறைய பள்ளிகள் கட்டுவேன், மற்ற நாடுகளுடன் கலந்துரையாடி நாட்டை மேம்படுத்துவேன். என் நாட்டில் திருடர்கள் என அடையாளப் படுத்தபட்டவர்களைத் திருத்தி நல்வழியில் சம்பாதிதது  வாழ உதவுவேன்.

ம. நிவேதா VII–B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *