
நான் ஆசிரியரானால்
நான் ஆசிரியரானால் எனக்குத் தெரிந்த கலைகளை என்னிடம் பாடம் படிக்க வரும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பேன். அவர்களுக்குப் பாடம் நன்றாக கற்றுக் கொடுத்து அவர்களை நல்ல மதிப்பெண் பெற வைப்பேன். அது மட்டுமின்றி நான் அவர்களுக்கு நிறைய புது விஷயங்களைக் கற்றுக் கொடுப்பேன், நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுப்பேன். அப்படிச் செய்தால் அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள்
திவ்யதர்ஷினி P VI – C
நான் ஆசிரியாரனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் நன்றாக பாடம் கற்றுக்கொடுப்பேன். நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுப்பேன். நான் எல்லாரியும் இனிமையாகப் பழக வேண்டும் என்று கூவேன். துன்புறுத்துமாட்டேன். நான் எல்லாருக்கும் சமமாக சொல்லிக் கொடுப்பேன். கற்றுக்கொடுப்பதில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பேன்.
G.JOSE DANIEL VI –C
நான் ஆசிரியரானால் எல்லாக் குழந்தைகளுக்கும் நல்ல படிப்பை வழங்குவேன். அனைத்துக் குழந்தைகளையும் ஒரு ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் அல்லது ஒரு ஜி.யு.போப்பாக மாற வழிகாட்டுவேன். ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பை வழங்குவேன், எல்லாக் குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். யாராவது தவறு செய்தால் அவர்களைத் திட்டாமல், அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். எல்லாரிடமும் எப்படிப் பாசமாக நடக்க வேண்டும் என கூறுவேன். நாம் எப்படி எல்லாம் போராடி சுதந்திரம் வாங்கினோம் என விளக்கமாகக் கூறுவேன். நம் நாட்டில் நிறைய வரலாறுகள் உண்டு அதைப் பற்றி அவர்கள் அறிய நூலகத்திற்கு அழைத்துச் செல்வேன்.
அ.த. அவந்திகா VI-D
நான் ஆசிரியரானால் என் குழந்தைகளுக்கு நல்லதையே போதிப்பேன். குழந்தைகள் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள் ஆனாலும், நான் அவர்களைத் துன்புறுத்து மாட்டேன் நான் தினமும் ஒரு நல்ல செய்தியைச் சொல்வேன். அவர்களிடம் பெரியவர்களுக்கு மரியாதை தருவது நல்லது எது கெட்டது? என எல்லாம் புரியவைப்பேன் நான் திருக்குறளை தினமும் போதிப்பேன் நல்ல எண்ணத்தோடு செயல்படுவது பற்றிக் கூறுவேன் ஒரு போதும் தவறான செயலைச் செய்யவிடமாட்டேன்.
பிரதிஸ்ரீ VI-C