நீ அறிவியல் அறிஞரைச் சந்தித்தால்
நான் அறிவியல் அறிஞரைச் சந்தித்தால் நான் அவரிடம் நம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க சில இயந்திரங்களை உருவாக்க வேண்டுவேன். அவரிடமிருந்து அறிவியல் பற்றி நிறைய கற்றுக் கொள்வேன். எனக்கிருக்கும் அறிவியல் சார்ந்த சந்தேகங்களை நீக்கிக் கொள்வேன். புதிய இயந்திரங்களைக் கண்டறிய என்னுடைய ஆலோசனைகளைக் கூறுவேன். நானும் ஒரு அறிஞனாக அவரிடமிருந்து பல அறிவுரைகளைக் கேட்பேன். இச்சமுதாயத்திற்குத் தேவையான பல இயந்திரங்களைப் படைக்குமாறு மீண்டும் வேண்டிக் கொள்வேன்.
இ. ஜானேஷ் VII–B