எல்லைகள் மீறினால்…
கடல் அலை கரை தாண்டாத வரை
அலை கரை மீறினால்…
காற்று மிதமாய் வருடும் வரை
தென்றல் சுகம்!!!
காற்று கட்டுக்கடங்காமல் வீசினால்…
ஆற்றில் நீர் அளவோடு பாயும் வரை
ஊருக்கு ஆறு அழகு!!!
ஆறு கரை புரண்டால்…
நிலம் நடுங்காத வரை
நாம் நலமாய் வாழலாம்!!!
நிலம் சினம் கொண்டால்…
மனிதன் மதம் பாராத வரை
மனிதனிடம் மனிதம் அழகு!!!
மனிதன் மனிதம் மறந்தால்…
சாரதா
சமூக அறிவியல் ஆசிரியை
என்.எஸ்.என். நினைவுப்பள்ளி