
நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால்
நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால் அங்கிருந்து என் கைபேசியில் காட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு என்னை மீட்கச் சொல்லுவேன். இல்லையெனில் நான் அந்தப் பகுதியில் காட்டு வாசிகள் யாரேனும் வாழ்கிறார்களா? என்று தெரிந்து கொள்வேன். அவ்வாறு வாழ்ந்தால், நான் அவர்களிடம் வெளியே செல்ல வழி கேட்பேன். அங்கு இருக்கும் ஆறுகளில் நான் உதவி என்னும் வார்த்தையை பாட்டிலில் எழுதித் தண்ணீரில் தூக்கிப் போடுவேன்.
முகிலன் IX A
நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால் பலவகையான மூலிகைகளையும், உணவுகளையும் உண்டு வாழ வேண்டியது தான். உணவு நம் உடலுக்கு வலிமையைத் தரும் உணவுகள் காடுகளில் கிடைக்கும்; இதை உண்டுவிட்டு நீரையும் அருந்திவிட்டு அவ்வூர் மக்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்வேன்; அவர்களிடம் உதவி நாடுவேன். இல்லையெனில் ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறி எங்கேயாவது திரும்பிச்செல்ல வழி உண்டா என்பதைப் பார்ப்பேன். அக்காட்டில் இருந்து வெளியே செல்ல முயலுவேன்.
க.ம.லீனா மாறன் IX–A
நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால் எனக்குத் தெரிந்த தற்காப்புக்கலை மூலம் ஆபத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வேன். அடர்ந்த காட்டிற்குள் நான் கூடாரங்கள் அமைத்து தங்கிக்கொள்வேன். உணவிற்காக நான் அருகில் இருக்கின்ற விலங்குகளை வேட்டையாடுவேன் அல்லது அருகில் உள்ள ஆறுகளில் நான் மீன்பிடித்து உணவு தயாரித்துக்கொள்வேன். நெருப்பிற்காக இரு கற்களை உரசி நெருப்பை உண்டாக்குவேன். அருகில் உள்ள ஊர்களை கண்டுபிடிக்க எனது பயணங்களை மேற்கொள்வேன். ஆகாயத்தில் பறக்கின்ற விமானங்களைப் பார்த்து தரையில் உதவி என பெரிதாக எழுதுவேன்.
செ. தீபக்குமார் IX–A