நான் கண்டுகளித்த ஓர் இடம்

 

நான் மிகவும் இரசித்துப் பார்த்த ஓர் இடம் பாண்டிச்சேரி. அங்கு எனக்கு மிகவும் பிடித்த இடம் அரவிந்தர் ஆசிரமம். அங்குச் சென்ற போது தியானம் செய்யக் கற்றுக் கொண்டேன். அங்கிருந்த ஆசிரமத்தில் இருந்த அமைதியான அறையையும் அங்கு நிலவிய அமைதியைப் பார்த்தவுடன் நான் வியந்து நின்றேன். மேலும்,  அங்கிருந்த கடலும் அழகாக இருந்தது. இதுவே, நான் கண்டு களித்த இடங்களாகும்.

                                         ஆ.ஸ்வீட்டி மேரி

                                        ஆறாம் வகுப்பு-‘ஈ’ பிரிவு

 

நான் பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறேன்.ஆனால் அதில் மிகச் சிறந்த மற்றும் எனக்குப் பிடித்த ஊர் கோவா. அது ஓர் அழகான ஊர்.அங்கே நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், கடல் ஆகியவை என்னைப் பிரமிக்க வைத்தன.கலங்கூட், பாகா, அஞ்ஜுனா, வாகேடர் என்ற இதைப் போல பல கடற்கரைகள் நான் கண்டு களித்த இடங்களாகும்.

                                                மு.முத்து ஸ்ரீனிவாசன்

                                                  ஆறாம் வகுப்பு-‘இ’ பிரிவு

நான் கண்டுகளித்த பல இடங்களில் ஒன்று கன்னியாகுமரி.

காந்தி மண்டபம்:

அங்கு தேசத்தந்தையான காந்திஜிக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவருடைய அஸ்தி அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் ஒரு பீடம் எழுப்பப்பட்டுள்ளது. அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாள் அப்பீடத்தின் மேல் சூரிய வெளிச்சம்படும்படி அக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

தேவி குமரி கோவில்:

உட்புறம் நிறைய சிற்பங்கள், ஒவியங்களுடன் கண்ணைக் கவரும் வண்ணத்தில் அமைந்துள்ள அன்னை பகவதி ஆலயம்.

விவேகானந்தர் பாறை:

கடலினுள் இருக்கும் பாறை ஒன்றின் மேல் அமர்ந்து தியானம் செய்ததை உரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் தியான மண்டபம், ஆர்ப்பரிப்புடன் கடலாடும் முக்கடல் சங்கமம், சூரியோதயம், சூரியனின் மறைவு ஆகியன நிறைந்த கன்னியாகுமரியே நான் கண்டு களித்த இடங்களில் ஒன்றாகும்.

                                                      ஜெ.நிஹானி

                                                  ஆறாம் வகுப்பு-‘இ’ பிரிவு

 

நான் கண்டு களித்த ஓர் இடம் மதுரை ஆகும். மதுரை என் சொந்த ஊரும் கூட. அங்குள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கோவிலின் சுற்றுச் சுவரில் வடிக்கப்பட்டுள்ள திருவிளையாடற் புராணங்கள், அவை கூறும் நாயன்மார்கள் வரலாறு, தெப்பக்குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை, மேலும் கோவில் கோபுரங்களின் அழகு ஆகியன நான் கண்டு களித்த இடமாகும்.

                                                     சுபேக்ஷணா

                                                ஆறாம் வகுப்பு-‘ஈ’ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *