இணையமும் இணையும் மக்களும்

21ஆம் நூற்றாண்டில், இணையதளப் பயன்பாடு பரவலாகி வருகிறது. பல அரசியல் செய்திகளும் நாட்டு நடப்புகளும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மக்கள், மனதில் இருக்கும் அனைத்தையும் இணையதளத்தில் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.இணையதளத்தைப் பார்த்தாலே சுவையான செய்திகள்தான். நடிகர் கமல்ஹாசன், மக்கள் எனப் பல பேர் ட்விட்டரில் அனைத்தையும் கொட்டி விடுகிறார்கள். இணையதளத்தில் கட்சியையே தொடங்குகிறார்கள் நடிகர்களும் மக்களும்.தன் மனதில் இருப்பதனை வெளிப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது இணையதளம்.இணையதளம் என்றாலே மக்களுக்கு உற்சாகம் தான்.அப்படிப்பட்ட இணையத்தில் சுவையான செய்திகள் வந்தால் மக்கள் சிறிது சிறிதாக நன்று…….நன்று………. என எழுதி விடுகிறார்கள்.அப்படி பல செய்திகள் வெளிப்படுத்த, வெளிப்படுத்த மக்களும் இணைகின்றனர்.தற்பொழுது, அரசியல் நிலவரத்தை மக்கள் சிறிது கூடத் தயங்காமல் வெளிப்படுத்துகிறார்கள்.’தமிழ்நாடே இணைய நாடாக மாறிவிட்டது’ என்று கூறுவதே சரியானது.

ஜ.அருணேஸ்வர்

                                                  ஏழாம் வகுப்பு ஆ பிரிவு

 

இணையத்தால் பல நன்மைகள் இருந்தாலும் அது மக்களை ஈர்த்துத் தவறான வழியில் செல்ல வைக்கிறது.அதில் நாம் ஈடுபாடு காட்டுதல் கூடாது. அதனால் பல தீமைகளும் உண்டு.இன்றைய உலகில் இணையத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது இயலாத ஒன்று. ஆதலால், அதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். இதனால், நாம் மற்ற வேலைகளை ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. இன்று மக்கள் அனைவரும் வாட்ஸ்அப், ட்விட்டர் ,பேஸ்ஃபுக் முதலியவற்றில் மூழ்கி விட்டனர். இதனால், மக்கள் நேரில் சந்தித்துப் பேசும் பழக்கமே அழிந்து விட்டது. அப்படிப்பட்ட இணையத்தில் நல்லதும் உண்டு,தீயதும் உண்டு. குழந்தைகளிலிருந்து முதியோர் வரை அனைவரும் இணையத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள்.95% மக்கள் பொழுது போக்குக்காக இதைப் பார்க்கின்றனர்.

சு.ஹீராஷினி

                                                   ஏழாம் வகுப்பு ஈ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *